நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

ஹூண்டாய் நிறுவனம் அதன் குறிப்பிட்ட கார் மாடல் ஒன்றுக்கு பெரும் தொகையை அதிரடி தள்ளுபடியாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

ஹூண்டாய் நிறுவனம் தனது புகழ்பெற்ற மின்சார காருக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 1.5 லட்சம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த தள்ளுபடி மை2020 கோனா எலெக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஹூண்டாய் அறிவித்திருக்கின்றது.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

2019ம் ஆண்டின் ஜூலை மாத்திலேயே இக்காரை ஹூண்டாய் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் வைத்தே இக்காரை ஹூண்டாய் தயாரித்து வருகின்றது. இந்தியாவிற்கான முதல் ஹூண்டாய் மின்சார காரும் இதுவே ஆகும். இதனால்தான் இதன் அறிமுகம் தடல்புடலாக தமிழகத்தில் அரங்கேறியது.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

இக்காரின் விற்பனைக்கான அறிமுகம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நடைபெற்றது. பச்சைக் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார். ஆகையால் முதலமைச்சரால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மின்சார கார் என்ற பெறுமையை இது பெற்றது. இதுமட்டுமின்றி சிறப்புகளைத் தாங்கிய காராகவும் இது இருக்கின்றது.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

இதன் இதன் மைலேஜ் திறன் மற்றும் சொகுசு வசதிகள் பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 452 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகின்றது. இது அராய் அமைப்பு வெளியிட்ட தகவலாகும். இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 9.7 வினாடிகளே போதும்.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

இத்தகைய திறன் வாய்ந்த மின் மோட்டாரே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் 136 பிஎஸ் மற்றும் 395 என்எம் திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும், 39.2 kWh பேட்டரியே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக 7.2 kW சார்ஜரை வீட்டிலேயே இன்ஸ்டால் செய்து வழங்குகின்றது ஹூண்டாய்.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

இத்தகைய சிறப்பு மிக்க ஹூண்டாய் கோனா மின்சார காரின் பக்கம் மக்களைக் கவரும் நோக்கிலேயே புதிய தள்ளுபடி பற்றி ஹூண்டாய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்காரின் விலை 23.75 லட்சம் ஆகும். இந்த விலையிலேயே ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்க இருப்பதாக ஹூண்டாய் அறிவித்திருக்கின்றது.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் விலையுயர்ந்த மின்சார கார் இதுவே ஆகும். எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு இருக்கின்றது. இதில், எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் மின்சார கார் ரூ. 20.88 லட்சம் என்ற விலையிலும், டாடாவின் நெக்ஸான் மின்சார கார் 13.99 லட்சம் விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

மேற்கூறிய அனைத்தும் ஆரம்பநிலை மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே தன் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி அறிவித்துள்ளது ஹூண்டாய். இக்காரில் பிரீமியம் வசதிகள் என்பதானலயே அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

நம்பவே முடியல! இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா?.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்!!

10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக் கூடிய இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட், ஆட்டோ மேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், காற்றோட்டமான இருக்கை, க்ரூஸ் கனட்ரோல் என எக்கசக்க அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோன்ற சூப்பர் அம்சங்களினாலயே கோனா இந்தியாவில் விலையுயர்ந்த மின்சார காராக விற்பனையில் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai Announces Rs. 1.5 Lakh Discount For Kona Electric. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X