Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
விற்பனை கார்களின் விலைகளை ரூ.45,000 வரையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாரிப்பு செலவு தொடர்ந்து அதிகரித்துவருவதால் கார்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக இந்தியாவில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் மோட்டார்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது ஹூண்டாய் கார்களின் புதிய எக்ஸ்ஷோரூம் விலைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை அட்டவணையாக இதோ...
Model | Pre-Hike Price | New Price | Hike |
Santro | ₹4.63 Lakh to ₹6.31 Lakh | ₹4.67 Lakh to ₹6.53 Lakh | ₹600 to ₹4,900 |
Grand i10 NIOS | ₹5.12 Lakh to ₹8.35 Lakh | ₹5.19 Lakh to ₹8.41 Lakh | ₹2,900 to ₹7,390 |
Aura | ₹5.85 Lakh to ₹9.28 Lakh | ₹5.92 Lakh to ₹9.32 Lakh | ₹2,200 to ₹9,800 |
Venue | ₹6.75 Lakh to ₹11.65 Lakh | ₹6.86 Lakh to ₹11.67 Lakh | ₹1,760 to ₹12,400 |
Verna | ₹9.02 Lakh to ₹15.17 Lakh | ₹9.11 Lakh to ₹15.20 Lakh | ₹2,700 to ₹12,100 |
Creta | ₹9.81 Lakh to ₹17.31 Lakh | ₹9.11 Lakh to ₹15.20 Lakh | ₹17,000 to ₹31,000 |
Elantra | ₹17.60 Lakh to ₹20.65 Lakh | ₹9.11 Lakh to ₹15.20 Lakh | ₹15,000 to ₹45,000 |
Tucson | ₹22.30 Lakh to ₹27.03 Lakh | ₹22.55 Lakh to ₹27.33 Lakh | ₹31,000 to ₹39,000 |

அதிகப்பட்சமாக ஹூண்டாய் எலண்ட்ராவின் விலை ரூ.45,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள ஒரே ப்ரீமியம் தரத்திலான நடுத்தர-அளவு செடான் காரான இதன் டாப் எஸ்எக்ஸ்(O) பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ரூ.45,000 என்ற அதிகப்படியான விலை உயர்வை பெற்றுள்ளன.

மிகவும் குறைவாக ஹூண்டாய் சாண்ட்ரோ ரூ.600ல் இருந்து ரூ.4,900 வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. ஏனெனில் இதன் ஆரம்ப விலையே ரூ.4.67 லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வெறும் ரூ.600 அதிகரிப்பை சாண்ட்ராவின் ஆரம்ப நிலை வேரியண்ட்களான மேக்னா சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி பெற்றுள்ளன.

ரூ.5.19 லட்சத்தை ஆரம்ப விலையாக ஏற்றுள்ள ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸிற்கு வழங்கப்பட்டுள்ள விலை அதிகரிப்பு ரூ.2,900ல் இருந்து ரூ.7,390 வரையில் உள்ளது. இதில் இதன் புதிய டர்போ வேரியண்ட்டும் அடங்குகிறது.

க்ராண்ட் ஐ10 நியோஸ் ஏற்றுள்ள பெரும்பான்மையான விலை அதிகரிப்பு ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 வரையில் உள்ளன. ஹூண்டாயின் சப்-4 மீட்டர் செடான் காரான அவ்ராவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2,200-ல் இருந்து ரூ.9,800 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக இதன் சிஎன்ஜி வேரியண்ட்களே ரூ.9 ஆயிரம் அளவில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. அதேபோல் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் அதன் டாப் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(O) வேரியண்ட்களின் விலைகள்தான் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளன.

மத்தியில் உள்ள வேரியண்ட்களே அதிகப்பட்ச விலை உயர்வுகளை ஏற்றுள்ளன. ஹூண்டாய் வெர்னாவின் புதிய விலைகள் ரூ.9.11 லட்சத்துல் இருந்து ரூ.15.20 வரையில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் விலைகள் ரூ.2,700ல் இருந்து ரூ.12,100 வரையில் அதிகரிப்பட்டுள்ளன.

இருப்பினும் இதன் டாப் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை வாங்குபவர்கள் குறைவான விலை அதிகரிப்பில் தங்களது கார்களை பெறலாம். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த புதிய தலைமுறை க்ரெட்டாவின் ஆரம்ப நிலை இ டீசல் வேரியண்ட்டின் விலை ரூ.31,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு டீசல் ட்ரிம்-இன் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. க்ரெட்டாவின் மற்ற டீசல் வேரியண்ட்களின் விலைகள் எதிலும் ஹூண்டாய் நிறுவனம் கை வைக்கவில்லை. பெட்ரோல் வேரியண்ட்கள் அதிகப்பட்சமாக ரூ.22,000 வரையில் விலை உயர்வை கண்டுள்ளன. ஹூண்டாய் டக்ஸனின் ஷோரூம் விலைகள் ரூ.31,000-ல் இருந்து ரூ.39,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.