மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காரை ஜனாபதியே முன்பதிவு செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper). இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது தென் கொரியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்த காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகளையும் ஹூண்டாய் நிறுவனம் தொடங்கியுள்ளது.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

தென் கொரிய சந்தையில் முதல் நாளிலேயே ஹூண்டாய் காஸ்பர் காருக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. தென் கொரியாவின் அதிபர் கூட ஹூண்டாய் காஸ்பர் காருக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இந்த காரின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

தென் கொரிய சந்தையில் ஸ்மார்ட் (ஆரம்ப நிலை வேரியண்ட்), மாடர்ன் (நடுத்தர மாடல்) மற்றும் இன்ஸ்பிரேஷன் (டாப் வேரியண்ட்) உள்ளிட்ட வேரியண்ட்களில், ஹூண்டாய் காஸ்பர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் காஸ்பர் காரின் வேரியண்ட்களை பொறுத்து விலை மாறுபடும்.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

டாப் வேரியண்ட்டான இன்ஸ்பிரேஷன் வேரியண்ட்டில், 17 இன்ச் அலாய் வீல்கள், 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் மற்றும் அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்ஷனலாக சன்ரூஃப் மற்றும் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸெரீஸ்கள், வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

காஸ்பர் காரின் அதிகாரப்பூர்வ வெளிப்புற படங்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தை போலவே உட்புறமும் நன்றாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் கேபினில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது இன்போடெயின்மெண்ட் சிஸ்டமை விட பெரிதாக இருப்பது போல் தெரிகிறது.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

அதே சமயம் இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல் பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புற டிசைனை பொறுத்தவரையில், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், முன் பகுதியில் ரேடியேட்டர் க்ரில் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

K1 பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹூண்டாய் காஸ்பர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற முன்னணி மாடல்களான சான்ட்ரோ மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்ட கார்களிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

ஹூண்டாய் காஸ்பர் காரின் நீளம் 3,595 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,595 மிமீ ஆகவும், உயரம் 1,575 மிமீ ஆகவும் உள்ளது. ஹூண்டாய் காஸ்பர் காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஹெச்பி பவரை உருவாக்கும்.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

இதுதவிர 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ஹூண்டாய் காஸ்பர் கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரை உருவாக்கும். இந்த 2 இன்ஜின்கள் உடனும், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் தற்போது இந்த காரின் உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டன.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

ஆரம்பத்தில் ஹூண்டாய் காஸ்பர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. அதன் பின்னர் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வராது என தகவல்கள் வெளியாயின. ஆனால் தற்போதோ, இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதை ஹூண்டாய் உயர்மட்ட நிர்வாகம் மறுக்கவில்லை என செய்திகள் வெளியாகின்றன.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

எனவே ஹூண்டாய் காஸ்பர் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? அல்லது வராதா? என்பது உறுதியாக தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதால், ஹூண்டாய் நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என நாம் எதிர்பார்க்கலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

இந்திய மதிப்பில் பார்த்தால் ஹூண்டாய் காஸ்பர் காரின் ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை தென் கொரியாவில் 8.6 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் மாடர்ன் வேரியண்ட்டின் விலை 9.92 லட்ச ரூபாயில் இருந்தும், இன்ஸ்பிரேஷன் வேரியண்ட்டின் விலை 11.67 லட்ச ரூபாயில் இருந்தும் தொடங்குகின்றன.

மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார் அறிமுகம்... ஜனாதிபதியே புக் பண்ணீட்டாரு! அந்த அளவுக்கு சூப்பரா இருக்கு!

பொதுவாக நாட்டின் அதிபர்கள் பயன்படுத்தும் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கும். ஆனால் இவ்வளவு குறைவான விலை கொண்ட ஒரு காரை தென் கொரியாவின் அதிபரே ஆர்டர் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கார் இந்தியாவிற்கு வந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

Most Read Articles
English summary
Hyundai casper launched in south korea here are all the details
Story first published: Friday, September 17, 2021, 21:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X