புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

உலகளவில் பிரபலமான தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் உலகளாவிய வெளியீட்டை இந்த நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கைகிண்டோ இந்தோனிஷியா சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் எதிர்பார்க்கிறோம்.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

இந்த நிலையில் தான் தற்போது க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்பக்க தோற்றத்தை வெளிக்காட்டும் விதத்திலான டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களின் மூலம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தையும், பக்கவாட்டு பகுதியையும் பார்க்க முடிகிறது. முன்னதாக இதேபோன்று க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்கெட்ச் டீசர் படங்களும் வெளியிடப்பட்டு இருந்தன.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

இத்தகைய படங்களின் மூலமாக 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் கூடுதல் கம்பீரமானதாகவும், டைனாமிக்கானதாகவும், எதிர்கால டிசைனிலும் கொண்டுவரப்பட உள்ளதை அறிய முடிகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்கள் புதிய 2022 க்ரெட்டா முன்பக்கத்தில் நகை பேட்டர்னில் எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட் அமைப்பை பெற்றுவரவுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

ஹெட்லைட் அமைப்பை ஒளிரும் செய்யும்போது பூமராங் வடிவம் உருவாகிறது. அதுவே அணைத்து வைக்கப்பட்டிருக்கும்போது முன்பக்க க்ரில்லிற்கு இணையாக ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. கடந்த வாரத்தில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஸ்கெட்ச் படம் வெளியானதில் இருந்து இந்தோனிஷியாவில் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களின் கவனம் கிடைத்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தோனிஷியா நிறுவனத்தின் இயக்குனர் சுங்ஜோங் ஹா தெரிவித்துள்ளார்.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

இதுகுறித்து ஹூண்டாய் இந்தோனிஷியாவின் இணையத்தள பக்கத்தில் சுங்ஜோங் ஹா, இந்தோனிஷியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் கருத்திற்கு ஏற்ப இந்த எஸ்யூவி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தோனிஷியாவில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் இந்தோனிஷிய மக்களுக்காக க்ரெட்டா தயாரிக்கப்படுகிறது என்றார்.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

புதிய ஹூண்டாய் க்ரெட்டாவில் புதிய அதிநவீன வசதிகளுடன் பனோராமிக் சன்ரூஃப், போஸ் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஎஃப்டி எல்சிடி க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம். இவற்றுடன் ப்ளூலிங்க் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டில் வழங்க ஹூண்டாய் முயற்சிக்கும். இந்த இணைப்பு வசதியானது, ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை காருடன் இணைக்க உதவுகிறது.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

பாதுகாப்பிற்கு, வாகனம் திருடு போகாமல் தடுக்கும் வசதி & ஒருவேளை திருடு போனால் வாகனத்தை பின்தொடரும் வசதி போன்றவை அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டாவில் வழங்கப்படலாம். இந்த வசதிகளின் ஒரு பகுதியாக கார் திருடு போவதை உடனடியாக உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுமாம். இதனை அடுத்து உரிமையாளர் ஹூண்டாயின் கால் செண்டரை அணுகி காரின் இயக்கத்தை நிறுத்தலாம்.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

இவற்றுடன் வாலெட் பார்க்கிங் மோட் வசதியையும் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டில் எதிர்பார்க்கிறோம். காரினை பழுதிற்காக மெக்கானிக் ஷாப்பில் விடும்போது இந்த மோடினை ஆக்டிவ் செய்துவிடலாம். இது காரின் உள்ளே டேஸ்போர்டில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் செயல்பாடுகளை இரகசியமாக பாதுகாக்கும்.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

இந்திய சந்தையை பொறுத்தவரையில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் இரண்டாம் தலைமுறை க்ரெட்டா நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுகத்தில் இருந்து க்ரெட்டாவின் விற்பனை இந்தியாவில் உச்சத்தில் தான் இருந்து வருகிறது.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையில் பல மாதங்களாக முதலிடத்தை பிடித்துவந்த ஹூண்டாய் க்ரெட்டா மாடல் சமீபத்தில் தனது முதலிடத்தை கியா செல்டோஸிற்கு விட்டுக்கொடுத்தது. இந்தியாவில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் அடுத்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கலாம். இதற்கு முன்னதாக பல வெளிநாட்டு சந்தைகளில் க்ரெட்டா விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

ரஷ்யா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் க்ரெட்டாவை அனைத்து-சக்கர-ட்ரைவ் கொண்ட காராக ஹூண்டாய் களமிறக்குகிறது. ஆனால் இந்தியாவில் இன்னமும் முன்சக்கர-ட்ரைவ் கொண்ட காராகவே க்ரெட்டா எஸ்யூவி உள்ளது. இந்திய சந்தையில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லி டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

புதிய முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! இந்தோனிஷியாவில் தயாராகிறது

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், சிவிடி ஆட்டோமேட்டிக், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் என்ற டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் என்ஜின் தேர்வை பொறுத்து வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு, மற்றொரு தென்கொரிய எஸ்யூவி காரான கியா செல்டோஸ் முக்கியமான போட்டி மாடலாக விளங்குகிறது.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai creta facelift new teaser details revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X