போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. குறிப்பாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் இதன் இரண்டாம் தலைமுறை அறிமுகமானதில் இருந்து க்ரெட்டா பல இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

இந்த நிலையில் தற்போது இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் வேறொரு விஷயத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, லடாக் போலீஸாரின் ரோந்து வாகனமாக க்ரெட்டா மாறியுள்ளது.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

லடாக்கை சுற்றி பார்க்க வருவோரை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் உயர் போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள இவை அனைத்தும், புதிய தலைமுறை க்ரெட்டாவின் டாப் வேரியண்ட்களாகும்.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

போலீஸாரின் பயன்பாட்டிற்காக க்ரெட்டாவில் மாற்றங்கள் எதுவும் பெரியதாக இல்லை. வெளிப்பக்கத்தில் மட்டுமே சிவப்பு-நீல நிறத்தில் லடாக் போலீஸ் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர்களும், லடாக் போலீஸாரின் உதவி எண்ணும், மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க க்யூ.ஆர் கோடும் வழங்கப்பட்டுள்ளன.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

போலீஸ் வாகனம் என்பதை தெரிவிக்கும் பெக்கான் விளக்குகள் க்ரெட்டாவின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன. நமக்கு கிடைத்துள்ள படம் ஒன்றில் இரு க்ரெட்டாக்கள் போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

லடாக் போலீஸார் இம்முறை எத்தனை ஹூண்டாய் க்ரெட்டா கார்களை வாங்கினர் என்பது தெரியவில்லை. இந்த தகவலை போலீஸார் இரகசியமாகவே வைத்துள்ளனர். க்ரெட்டாவை பொறுத்தவரையில், இரண்டாம் தலைமுறை அப்கிரேட்டிற்கு பிறகு சாலையில் அது நிற்கும் விதமாகட்டும், இயங்கும் விதமாகட்டும் மொத்தமாக மாறிவிட்டது.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

கூடுதல் காற்றோட்டமான உட்புறத்தில் நீண்ட தொழிற்நுட்ப வசதிகளுடன், அதிக எண்ணிக்கையில் என்ஜின்-டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் மற்றும் வேரியண்ட்கள் வரிசையுடன் புதிய க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

அதிகப்பட்சமாக ரூ.17.70 லட்சம் வரையிலான விலைகளில் க்ரெட்டா கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டாவில் தற்சமயம் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

இவற்றுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7-ஸ்பீடு டிசிடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் உட்புறத்தில் வழங்கப்படும் அம்சங்களில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், ஸ்டேரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்ட பெடல் ஷிஃப்டர்கள் போன்றவை அடங்குகின்றன.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

இவற்றுடன் மடக்கும் வசதி கொண்ட முன் இருக்கைகள், வயர் இல்லா போன் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பின்பக்க ஏசி துளைகள், பின் ஜன்னல் கண்ணாடி சன்ஷேட்கள் உள்ளிட்டவற்றையும் க்ரெட்டாவில் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

போலீஸாரின் ரோந்து வாகனமாக மாறியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார்கள்!! ஒவ்வொன்றின் விலையும் ரூ15 லட்சம் இருக்கும்

விற்பனையில் ஜொலித்துவரும் நிலையில் க்ரெட்டா எஸ்யூவி காருக்கு மிட்-லைஃப் புத்துணர்ச்சியாக்கக்கூடிய அப்டேட்டை வழங்க ஹூண்டாய் தயாராகி வருகிறது. டக்ஸன் காரை ஒத்த ரீடிசைனில் க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்களை பெற்றுவரவுள்ளதாக கூறப்படும் அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டாவின் சோதனை மாதிரி ஒன்றின் ஸ்பை படங்கள் சமீபத்தில் கூட வெளியாகி இருந்தன.

Most Read Articles

English summary
Hyundai Creta Joins Ladakh Police Force, Dons Cop Car Livery.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X