இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ஒன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அல்கஸாரின் முன்பக்கத்துடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

க்ரெட்டாவினால் நடுத்தர-அளவு எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை மாடல் அறிமுகமானதில் இருந்து க்ரெட்டா கார்களின் விற்பனை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 12,000 க்ரெட்டா கார்களாவது விற்பனையாகி விடுகின்றன. இந்த எண்ணிக்கைகள் இந்தியர்களின் விருப்பமான எஸ்யூவி கார் தற்போதைக்கு க்ரெட்டா தான் என்பதை ஒவ்வொரு மாதத்திலும் நிரூப்பித்து கொண்டே வருகின்றன.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

நகரங்களில் குறைந்தப்பட்சம் 5 கிமீ சுற்றளவில் ஒரு க்ரெட்டா காரையாவது பார்த்துவிடலாம். இதனாலேயே க்ரட்டா வைத்திருப்பவர்களில் சிலர், மாடிஃபை பணிகளை மேற்கொண்டு மற்ற க்ரெட்டா கார்களில் இருந்து தங்களது க்ரெட்டா காரை வித்தியாசப்படுத்தி கொள்கின்றனர்.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

அவ்வாறு தான் இங்கு புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் ஒன்று ஃபேஸ்லிஃப்ட் மாடிஃபிகேஷன் மாற்றங்களை ஏற்றுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் என்றதுமே உங்களுக்கு தெரிந்திருக்கும், ஆம் காரின் முன்பகுதி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

க்ரெட்டாவின் முன்பகுதி முழுவதுமாக காரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்கஸார் காருடையது வழங்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கார், க்ரெட்டாவின் விலை குறைவான, ஆரம்ப நிலை வேரியண்ட்டான இ ஆகும்.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

முன்பக்கம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளதால், காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் பம்பர், ரேடியேட்டர் க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை அனைத்தும் புதியவைகளாக மாறியுள்ளன. இவை அனைத்தும் 7-இருக்கை காரான அல்கஸாரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

இந்த மாற்றத்தினால் அல்கஸாரின் பதிக்கப்பட்ட முறையிலான க்ரில் அமைப்பை பெற்றுள்ள இந்த க்ரெட்டா காரில் அல்கஸாரின் ஹெட்லேம்ப்கள் கூடுதல் பிரீமியம் தோற்றத்தை தருகின்றன. இதன் விளைவாக கார் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாறியுள்ளது.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

முன்பக்க பம்பர் இன்னமும் காரின் வெள்ளை நிறத்திற்கு பெயிண்ட் செய்யப்படவில்லை. பெயிண்ட் செய்யப்பட்டால் இந்த க்ரெட்டா கார் பார்ப்பதற்கே பயங்கரமானதாக மாறிவிடும். முன்பக்கத்திற்கு ஏற்ப சக்கரங்களும் அல்கஸாரில் இருந்து பெறப்பட்டுள்ளன.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

வெளிப்பக்கம் மட்டுமின்றி, கருப்பு- பழுப்பு நிற அலங்கரிப்பில் உட்புற கேபினும் அல்கஸாருக்கு இணையானதாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் புதியதாக தொடுத்திரை ஒன்றும் மைய கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது. க்ரட்டாவின் இ வேரியண்ட்டில் ஸ்டேரிங் சக்கரத்திலும், கதவு பேடிலும் லெதர் வழங்கப்படுவதில்லை.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

ஆனால் இவ்ற்றை எல்லாம் இந்த உரிமையாளர் கொண்டுவந்துள்ளார். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஹூண்டாய் க்ரெட்டா கார் மிக அற்புதமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மாடிஃபிகேஷன் பணிகளை அனுபவமிக்க நபர் தான் செய்திருக்க வேண்டும்.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

சாலையில் மட்டுமல்ல, எப்பேர்பட்ட கூட்டத்திலும் இந்த க்ரெட்டா கார் மட்டும் தனித்து தெரியும். இந்த கார் தொடர்பாக விக் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம். விக் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்பது தான் இந்த க்ரெட்டா காரை மாடிஃபை செய்த நிறுவனத்தின் பெயராக இருக்க வேண்டும்.

Image Courtesy: VIG AUTO ACCESSORIES

க்ரெட்டாவின் ஆரம்ப நிலை இ வேரியண்ட்டினை ரூ.10.16 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதுவும் நல்லா தான் இருக்கு!! அல்கஸாரின் முன்பக்கத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா - வீடியோ!

அதேநேரம் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்விலும் க்ரெட்டா இ வேரியண்ட் கிடைக்கிறது. ஆனால் டீசல் என்ஜின் உடன் க்ரெட்டாவின் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ரூ.10.61 லட்சமாகும். ஆனால் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மட்டுமே க்ரெட்டா இ கார்களில் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
New Hyundai Creta Modified With Alcazar Face.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X