இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்துள்ளது. ஆம், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் 6 லட்சம் கிரெட்டா எஸ்யூவிக்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

கிரெட்டா எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின், ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை மேலும் உயர்ந்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 லட்சம் யூனிட் விற்பனை என்ற மைல்கல்லை கடந்தது.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

எஞ்சிய 1 லட்சம் கார்கள் சுமார் 9 மாத கால அளவில் விற்பனையாகியுள்ளன. இத்தனைக்கும் புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின் இந்தியாவில் பெரும்பாலான மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போதும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலிலும் கூட புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து கொண்டுள்ளது.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

2020ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில், ஹூண்டாய் நிறுவனம் சுமார் 1.40 லட்சம் புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவிக்களை விற்பனை செய்துள்ளதாக விற்பனை தரவுகள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக புதிய தலைமுறை கிரெட்டா இருந்து வருகிறது.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் கிரெட்டா 5 சீட்டர் மாடல் ஆகும். எனவே அதன் 7 சீட்டர் வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

5 சீட்டர் எஸ்யூவி கார்களின் 7 சீட்டர் வெர்ஷன்களை பல்வேறு நிறுவனங்கள் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், புதிய டாடா சஃபாரி போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இதில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், எம்ஜி ஹெக்டரின் 7 சீட்டர் மாடல் ஆகும். புதிய டாடா சஃபாரி, டாடா ஹாரியரின் 7 சீட்டர் வெர்ஷன் ஆகும்.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

இந்த வரிசையில் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அல்கஸார் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி வரும் ஜூன் 18ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா! இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லட்சம் கார்கள் விற்பனையா?

ஹூண்டாய் கிரெட்டாவை போல், அல்கஸார் எஸ்யூவிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஹூண்டாய் அல்கஸார் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். வசதிகள் உள்பட பல்வேறு அம்சங்களை ஹூண்டாய் கிரெட்டாவுடன் இந்த எஸ்யூவி பகிர்ந்து கொள்கிறது.

Most Read Articles

English summary
Hyundai Creta SUV Achieves New Sales Milestone: Read More To Find Out. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X