செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின், ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை சிறப்பாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை மாடல் மூலம் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா வலுவான 'கம் பேக்' கொடுத்தது. இதன்பின் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

கடந்த 2020ம் ஆண்டின் கடைசி மாதத்தில், அதாவது கடந்த டிசம்பரில், ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 10,592 கிரெட்டா எஸ்யூவிக்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 6,713 கிரெட்டா எஸ்யூவிக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 58 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் கிரெட்டா பதிவு செய்துள்ளது.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், அதன்பின் வந்த டிசம்பரில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவிக்களின் விற்பனை சரிந்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் சுமார் 12,000 கிரெட்டா எஸ்யூவிக்களை விற்பனை செய்திருந்தது. இது 12 சதவீத வீழ்ச்சியாகும்.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

எஸ்யூவி செக்மெண்ட்டில் நடப்பு ஆண்டிலும் ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கியா செல்டோஸ் எஸ்யூவி உடனான ஹூண்டாய் கிரெட்டாவின் போட்டி வரும் மாதங்களில் எப்படி இருக்கப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தற்போது கிரெட்டா எஸ்யூவியை 5 சீட்டர் வெர்ஷனில் விற்பனை செய்து வருகிறது.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

ஆனால் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அனேகமாக நடப்பு ஆண்டின் ஏதேனும் ஒரு சமயத்தில் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது சில முறை கேமரா கண்களில் ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் சிக்கியுள்ளது. அத்துடன் தென் கொரியாவிலும் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் 5 சீட்டர் எஸ்யூவிக்களின் 7 சீட்டர் வெர்ஷன்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

விற்பனைக்கு வந்த பின், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புத்தம் புதிய டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் போட்டியிடும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது இந்த 7 சீட்டர் மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு வருகிறது.

செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன் அல்காசர் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 சீட்டர் மாடலில் இருக்கும் அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்தான் 7 சீட்டர் மாடலில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 7 சீட்டர் மாடலில் மட்டுமல்லாது 6 சீட்டர் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Creta SUV Sales Increased By 58 Per cent In December 2020 - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X