ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் சுமார் 8 மாதங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து க்ரெட்டா எஸ்.எக்ஸ்(ஒ) டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கார் உரிமையாளர் ஒருவரின் இ-மெயிலில் இருந்து டீம் பிஎச்பி செய்தித்தளம் வாயிலாக கசிந்துள்ள இந்த விபரங்களின்படி, அவர் வாங்கியுள்ள இந்த ஹூண்டாய் க்ரெட்டா வேரியண்ட்டிற்கு கிட்டத்தட்ட 7-இல் இருந்து 8 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டுமாம். இது சற்று அதிகம் தான்.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

காரை உருவாக்க தேவையான பாகங்கள் பற்றாக்குறையால் எப்படியிருந்தாலும் 5இல் இருந்து 6 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டியாக இருக்கும் என முன்னதாகவே இந்த க்ரெட்டா எஸ்.எக்ஸ்(ஒ) டீசல் ஆட்டோமேட்டிக் காரின் உரிமையாளர் எதிர்பார்த்துள்ளார். ஆனால் 5-6 என்பது இப்போது திருத்தப்பட்டு, 7-8 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

இவ்வாறு க்ரெட்டாவின் எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(ஒ) வேரியண்ட்களே தற்சமயம் அதிகளவில் விற்பனையாகுபவையாக உள்ளன. இந்த எஸ்யூவி மாடலின் மொத்த விற்பனையில் இந்த இரு வேரியண்ட்களின் டீசல் மாடல்கள் மட்டுமே 60 சதவீதமாக உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(ஒ) டீசல் மேனுவல் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.15.09 லட்சத்தில் இருந்து ரூ.16.37 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

அதுவே எஸ்.எக்ஸ் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.16.57 லட்சமாகவும், எஸ்.எக்ஸ்(ஒ) டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.17.78 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா டீசல் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.63 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

ஆனால் எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(ஒ) என்ற இரு விலைமிக்க வேரியண்ட்களுக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் சேருவது உண்மையில் ஆச்சிரியமான விஷயமே. க்ரெட்டா பெட்ரோல் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.16 லட்சத்தில் இருந்து ரூ.17.87 லட்சம் வரையில் உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்துதான் க்ரெட்டாவிற்கு வாடிக்கையாளர்கள் குவிய துவங்கினர்.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

2020 மார்ச், சரியாக கொரோனா வைரஸ் நம் இந்தியாவில் மெல்ல மெல்ல நுழைந்த மாதம். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையின்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஹூண்டாய் எஸ்யூவி காருக்கு மற்ற கார்களை போல் 2020 ஏப்ரல் மற்றும் பாதி மே மாதத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் கிடைக்கவில்லை. ஏனெனில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

அதன்பின், அதாவது 2020 மே மாத பாதிக்கு பிறகு க்ரெட்டாவின் விற்பனை எதிர்பார்த்ததை போலவே சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் வரையில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையில் க்ரெட்டா தான் டாப் நம்பர்-1. கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் கியா செல்டோஸ் நீண்ட மாதங்கள் கழித்து முதலிடத்திற்கு வந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

புதிய இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டாவிலும் கியா செல்டோஸின் என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் தான் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி இவை இரண்டிலும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் (115 எச்பி), 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் (115 எச்பி) மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (140 எச்பி) என்ற மூன்று என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

1.5 லி பெட்ரோல் யூனிட் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லி டர்போ-டீசல் உடன் அதே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றன. ஒரே விதமான என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெற்ற போதிலும், கியா செல்டோஸை காட்டிலும் ஹூண்டாய் க்ரெட்டாவில் சிறப்பான அளவில் மைலேஜ் கிடைப்பதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாங்க போறீங்களா? இந்த இரு வேரியண்ட்களின் டெலிவிரிக்கு 8 மாதம் காத்திருக்கனும்!

இவ்வாறு மிக சில விஷயங்களில் மட்டுமே ஒன்றையொன்று முந்துவதினால் தான் இவை இரண்டிற்கும் இடையே போட்டி வலுத்து வருகிறது. இவை இரண்டில் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் பெரியதாக பாதிக்கப்பட்டிருப்பது என்னமோ.. ஹூண்டாய் க்ரெட்டா தான். ஏனெனில் கடந்த மாதத்தில் இந்த ஹூண்டாய் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட 34% குறைந்துள்ளது.

அதாவது 2020 செப்டம்பர் மாதத்தில் 50,313 க்ரெட்டா கார்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த மாதத்தில் 33,807 க்ரெட்டா கார்களே தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தயாரிப்பு பணிகளில் ஏற்படும் இந்த தடை அப்படியே க்ரெட்டா கார்களின் விற்பனையிலும் எதிரொலிக்கிறது.

Most Read Articles
English summary
Hyundai Creta waiting period increases to 8 months!.
Story first published: Tuesday, October 19, 2021, 2:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X