சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

சரியாக விற்பனையாக காரணத்தினால் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அல்கஸார் (Alcazar) எஸ்யூவி கார் மாடலில் இரு தேர்வுகளை விற்பனையில் இருந்து தூக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த கார் மாடலின் குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கு மட்டும் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துக் காணப்படுகின்றது. இந்த குறைவான வரவேற்பைப் பெற்று வரும் தேர்வுகளையே தயாரிப்பு நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்து நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

ஆரம்ப நிலை தேர்வுகளான ப்ரெஸ்டீஜ் (prestige) மற்றும் ப்ரெஸ்டீஜ் (ஓ) (prestige (O)) ஆகிய இரு கார் மாடல்களையே நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்து நீக்கியிருக்கின்றது. இரண்டும் 6 இருக்கைகள் வசதிக் கொண்ட கார் மாடல்கள் ஆகும். விற்பனையில் இருந்து இது நீக்கப்பட்டிருந்தாலும், தற்போது, அதன் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் நீக்கப்பட்ட இரு மாடல்களும் காட்சியளிக்கின்றன.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட யூனிட்டுகள் விற்று தீர்க்கும் வரை அது பட்டியலில் காட்சியளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து முழுமையாக விற்ற பின்னர் தளத்தில் இருந்து ப்ரெஸ்டீஜ் மற்றும் ப்ரெஸ்டீஜ் (O) மாடல்கள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதால் தற்போது ப்ரெஸ்டீஜ் பெட்ரோல் 7 இருக்கை தேர்வு மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

இதேபோல் வெளியேற்றப்பட்ட இரு மாடல்களைத் தவிர மற்ற அனைத்து மாடல்களும் எந்த மாற்றமும் இன்றி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அறிமுகத்தின்போது ஹூண்டாய் அல்கஸார் ப்ரெஸ்டீஜ் எம்டி, ப்ரெஸ்டீஜ் (O)ஏடி, பிளாட்டினம், பிளாட்டினம் (O)ஏடி, சிக்னேச்சர் எம்டி மற்றும் சிக்னேச்சர் (O)ஏடி ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

ஹூண்டாய் விற்பனையில் இருந்து நீக்கியிருக்கும் அல்கஸார் ப்ரெஸ்டீஜ் பெட்ரோல் 6 சீட்டர் தேர்வின் விலை ரூ. 16.30 லட்சம் ஆகும். ப்ரெஸ்டீஜ் 17.94 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இரு மாடல்கள் வெளியேற்றப்பட்டிருப்பதால் அல்கஸார் காரின் ஆரம்ப விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

ரூ. 16.45 லட்சமே அல்கஸார் எஸ்யூவியின் ஆரம்ப விலையாகும். இதன் உயர்நிலை தேர்வு ரூ. 20.15 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும். சிக்னேச்சர் (O) டீசல், ட்யூவல் டோன் வேரியண்டின் விலை இது. மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் எஸ்யூவியில் பன்முக சிறப்பு வசதிகளை வழங்கி வருகின்றது. அந்தவகையில், எல்இடி மின் விளக்குகளால் வாகனம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. ஹெட்லைட் மற்றும் வால் பகுதி மின் விளக்கு என அனைத்தும் எல்இடி மின் விளக்குகளாக காட்சியளிக்கின்றன.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

இத்துடன், 10.25 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (கார் இணைப்பு வசதிக் கொண்டது), ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் ப்ளே வசதி, பின்னிருக்கையாளர்களுக்கு ஆர்ம் ரெஸ்ட் வசதி, ஒயர்லெஸ் சார்ஜர், 64 நிறங்கள் கொண்ட ஆம்பிசியன்ட் மின் விளக்கு மற்றும் கூல்டு குளோவ் பாக்ஸ் ஆகிய பிரீமியம் தர அம்சங்களும் அல்கஸார் எஸ்யூவியில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

தொடர்ந்து, மிக அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நோக்கில் இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் உடன் கூடிய கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் டயரின் பிரிஷரை காண உதவும் மானிட்டர் ஆகியவையும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

சரியா ஓடல... Alcazar-இன் இரு தேர்வுகளை தூக்கிய Hyundai! இரண்டுமே குறைந்த விலை கொண்டவை!

1.5 லிட்டர் டீசல் சிஆர்டிஐ மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எம்பிஐ என இருவிதமான மோட்டார் தேர்வுகள் அல்கஸார் காருக்கு வழங்கப்படுகின்றது. இதில் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாகக 159 பிஎஸ் வரையிலும், டீசல் எஞ்ஜின் 115 பிஎஸ் வரையிலும் பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிகள் வழங்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Hyundai discontinued alcazar prestige and prestige o petrol 6 seater
Story first published: Wednesday, November 17, 2021, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X