11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் மாடலில் கிடைத்து வந்த பிரத்யேக வசதியை 11இல் இருந்து ஐந்தாக குறைத்திருக்கின்றது தயாரிப்பு நிறுவனம். அப்படி என்ன வசதியை நிறுவனம் குறைத்துள்ளது என்பது பற்றிய முக்கிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் இந்தியாவில் ஓராண்டை நிறைவு செய்திருக்கின்றது. இந்த காரை தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 5ம் தேதி அன்று நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 6.8 லட்சம் தொடங்கி ரூ. 11.18 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

இதனால் தனது பிரிவில் மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற பெயரை ஐ20 சூடியிருக்கின்றது. பிரீமியம் தர வசதிகள் மற்றும் அம்சங்கள் ஏராளம் என்பதால் இத்தகைய உச்சபட்ச விலையை தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. என்னதான் இக்கார் அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைத்தாலும், இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் சிறந்த வாகனமாக ஐ20 திகழ்கின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 81 ஆயிரம் விற்பனை என்ற புதிய மைல்கல்லை அது எட்டியது. இது மாதம் ஒன்றிற்கு 6.8 ஆயிரம் புதிய வாகனம் விற்பனையாவதற்கு சமம் ஆகும். தற்போது, விற்பனையில் கணிசமான வளர்ச்சியை புதிய தலைமுறை ஐ20 பெற்று வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் மிக சிறந்த விற்பனையைப் பெறும் பிரீமியம் ஹேட்ச்பேக்காக இது காட்சியளிக்கின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

இத்தகைய ஓர் கார் மாடலிலேயே குறிப்பிட்ட ஓர் வசதியை தயாரிப்பு நிறுவனம் நீக்கியிருக்கின்றது. அதாவது, இரட்டை நிற தேர்வை நிறுவனம் விளக்கியுள்ளது. அனைத்து தேர்வுகளிலும் அல்லாமல் மிக குறைவான சில தேர்வுகளில் மட்டுமே இத்தேர்வை நிறுவனம் வழங்கி வந்தது. இதன் எண்ணிக்கையையே தற்போது ஹூண்டாய் குறைத்திருக்கின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

ஆம், குறிப்பிட்ட தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இரு நிற வசதியையே நிறுவனம் தற்போது நீக்கியிருக்கின்றது. அறிமுகத்தின்போது ஒட்டுமொத்தமாக 11 வேரியண்டுகளில் இரு நிற தேர்வுகள் வழங்கப்பட்டன. இதனை தற்போது மிக மிக கம்மியாக்கியிருக்கின்றது, ஹூண்டாய். ஐந்து வேரியண்டுகளில் மட்டும் இரு நிற தேர்வுக் கிடைக்கும் வகையில் நிறுவனம் வழி வகை செய்திருக்கின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

இரு நிற தேர்வானது ஃபையரி சிவப்பு உடன் கருப்பு நிற ரூஃப்பிலும், போலார் வெள்ளை நிறத்துடன் கருப்பு நிற ரூஃப்பிலும் வழங்கப்படும்.

எந்தெந்த தேர்வில் கிடைத்து வந்த இரு நிற தேர்வுகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை பட்டியலாகக் கீழே காணலாம்:

Hyundai i20 Dual Tone Status
Petrol
1.2 MT Sportz Available
1.2 IVT Sportz Discontinued
1.0 IMT Sportz Discontinued
1.2 MT Asta Discontinued
1.2 MT Asta (O) Available
1.2 IVT Asta Discontinued
1.0 IMT Asta Available
1.0 DCT Asta Discontinued
1.0 DCT Asta (O) Avaialable
Diesel
1.5 MT Sportz Discontinued
1.5 MT Asta (O) Available
11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

மிக சமீபத்தில் ஹூண்டாய் அல்கஸார் கார் மாடலில் விற்பனைக்குக் கிடைத்து வந்த இரு வேரியண்டுகளை நிறுவனம் நீக்கியது. இதைத் தொடர்ந்து, தனது அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் இரு நிற தேர்வை குறைத்திருக்கின்றது, ஹூண்டாய். இக்காரில் பன்முக சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்கி வருகின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

10.25 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், பின்பக்கத்திற்கு ஏசி துவாரங்கள், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல்,ப்ளூ லிங்க் இணைப்பு வசதி (50 கார் இணைப்பு வசதிகளை இதன் வாயிலாக பெற முடியும்), இது போன்ற என்னற்ற வசதிகளை ஹூண்டாய் ஐ20 காரில் வழங்கியிருக்கின்றது.

11ஆக இருந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்த Hyundai... அதிகம் விற்பனையாகும் கார் மாடலில் அதிரடி மாற்றம்!

ஹூண்டாய் ஐ20 காரில் 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Hyundai discontinued dual tone option from i20 selected variants
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X