Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கா இப்படியொரு நிலைமை?! ஷோரூம்களில் ஸ்டாக்கே இல்லையாம்!!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரின் பெயர் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து அதன் க்ராண்ட் ஐ10 காரின் பெயரை நீக்கியதை அடுத்து, டீலர்களிடம் விசாரித்ததில் பெரும்பான்மையானவர்களிடம் தற்போதைக்கு எந்த க்ராண்ட் ஐ10 காரும் ஸ்டாக்கில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் இந்த ஹூண்டாய் கார் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

ஏனெனில் சில டீலர்களிடம் மிகவும் குறைவான எண்ணிக்கையில் சலுகைகளுடன் க்ராண்ட் ஐ10 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் 2020ல் தயாரிக்கப்பட்ட மாதிரிகளாகும்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் தற்போதைக்கு சாண்ட்ரோ, க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் புத்தம் புதிய ஐ20 என்ற மூன்று ஹேட்ச்பேக் மாடல்கள் மட்டுமே உள்ளன. க்ராண்ட் ஐ10-ல் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 82 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 மாடலுக்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ என்ற பி2 ஹேட்ச்பேக் கார்கள் போட்டியாக இருந்தன.

2019 நவம்பர் மாதம் வரையில் நான்கு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்ட க்ராண்ட் ஐ10 அதன்பின் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.5.91 லட்சம் மற்றும் ரூ.5.99 லட்சம் ஆக இருந்தன.

க்ராண்ட் ஐ10 மட்டுமின்றி விற்பனையாகாத மாடல்களின் வேரியண்ட்களை நிறுத்தி கொள்ளும் பணியிலும் ஹூண்டாய் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் சாண்ட்ரோ, வென்யூ மற்றும் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடல்களின் விலைகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.