Just In
- 54 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 13 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்படிபோடு... புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆப்பிள் - ஹூண்டாய் இடையே பேச்சுவார்த்தை!
புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக ஆப்பிள் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதி உயர்வகை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மின்சார கார் மாடலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் போலவே, இந்த எலெக்ட்ரிக் காரும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளறி உள்ளது.

ஆனால், ஆப்பிள் கார் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவதும், அப்படியே அடங்கிப் போவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக ஆப்பிள் கார் குறித்த செய்திகள் மீண்டும் வெளியாகி வருகின்றன.

அதிலும், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல், ஆப்பிள் கார் குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக ஆப்பிள் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல்முறையாக இந்த தகவலை ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சிஎன்பிசி பத்திரிக்கையிடம் உறுதிப்படுத்தி உள்ளார். அதுவும், இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.

இந்த செய்தி வெளியான உடனே, ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள் தென்கொரிய பங்கு சந்தையில் 19.42 சதவீதம் தடாலடியாக உயர்ந்தது. அதேபோன்று, ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஹூண்டாய் வியா, ஹூண்டாய் மொபிஸ் மற்றும் ஹூண்டாய் க்ளோவிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலையும் 8.41 சதவீதம் அதிகரித்தது. இந்த செய்திகள் ஒருபுறம் இருக்கும் நிலையில், ஹூண்டாய் - ஆப்பிள் கார் நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் கார் வெளிவருவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மின்சார கார் தயாரிப்புக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார் பிராண்டுகளில் பல வகையான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வர இருக்கின்றன. மேலும், இந்த கார்களின் பேட்டரியை சார்ஜ் செய்தால் குறைந்தது 500 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் - ஆப்பிள் இடையிலான தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் கார் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, இரு நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க கூட்டணி அமைத்தால், அது நிச்சயம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய பாதையை வகுத்து கொடுக்கும். மேலும், இந்த கூட்டணியின் கார் மாடல் இந்தியாவிலும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.