Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அவ்ரா செடான் காரில் புதியதாக பின்பக்க விங் ஸ்பாய்லர்!! அதற்கு பதிலாக சூப்பரான வசதியை நீக்கிய ஹூண்டாய்
இந்த புதிய நிதியாண்டை பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளன. இதில் தற்போது அவ்ரா செடான் காரின் விலையை அதிகரித்ததன் மூலம் புதிதாக ஹூண்டாய் நிறுவனமும் இணைந்துள்ளது.

அவ்ராவின் வேரியண்ட்கள் அனைத்தின் விலைகளும் ரூ.4,240 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம், பின்பக்கத்தில் ஸ்பாய்லரின் மீது புதியதாக இறக்கை (விங்) சேர்க்கப்பட்டது ஆகும். இதற்கான தொகையே ரூ.4,240 என ரஷ்லேன் செய்திதளம் தெரிவித்துள்ளது.

ஆனால் விலை குறைவான இ ட்ரிம்-இல் மட்டும் இந்த வசதி கிடைக்காது. இதன் மூலம் காரின் தோற்றம் மெருகேறிவிடும் என்பது மட்டும் உறுதி. அதுமட்டுமில்லாமல் அவ்ராவின் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான பண்பும் மேலும் அதிகரிக்கும்.

அதேநேரம் ஏஎம்டி வேரியண்ட்களில் மட்டும் 15 இன்ச் இரும்பு சக்கரங்களில் 3எம் கிராஃபிக்ஸிற்கு மாற்றாக கன்மெட்டல் ஃபினிஷ் வழங்கப்படும். சப்-4 மீட்டர் காம்பெக்ட் செடான் காரான அவ்ராவில் சில வசதிகளை புதியதாக கொண்டுவந்தது மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனம் சில வசதிகளை நீக்கியும் உள்ளது.

அவ்ராவின் எஸ்எக்ஸ் ட்ரிம்மில் இருந்து வழங்கப்பட்டு வந்த ஆர்காமிஸ் ஆடியோ சிஸ்டம் ஒட்டு மொத்தமாக அனைத்து ட்ரிம்மில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக புதியதாக எதாவது சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஆரம்ப நிலை இ ட்ரிம்-இல் இனி 13 இன்ச் ஸ்பேர் சக்கரமும் கிடைக்கும்.

இந்த வருடத்திலேயே அவ்ரா செடான் கார் ஏற்கும் இரண்டாவது விலை அதிகரிப்பு இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.9,800 அளவிலான விலை உயர்வை கண்டிருந்தது. ஆனால் அந்த முறை இந்த செடான் காரின் பாகங்களில் கை வைக்கப்படவில்லை.

ஹூண்டாய் அவ்ரா மூன்று விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்று, 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின். அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

மற்றொன்று, 1.0 லிட்டர் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் என்ஜின். 99 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியது. மூன்றாவதாக 1.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் தேர்விலும் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 74 பிஎச்பி மற்றும் 190 என்என் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இவற்றிற்கு ஸ்டாண்டர்டாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. நேச்சுரலி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் மட்டும் கூடுதல் தேர்வாக 5-ஸ்பீடு ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இவற்றுடன் சிஎன்ஜி தேர்விலும் அவ்ரா செடான் கார் கிடைக்கிறது. 6 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் ஹூண்டாய் அவ்ராவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.5.92 லட்சத்தில் இருந்து ரூ.9.30 லட்சம் வரையில் உள்ளன.