ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சிறப்பு சேமிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கார் மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது என்ற விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் சான்ட்ரோ, ஆரா, க்ராண்ட் ஐ10 நியோஸ், ஐ20 மற்றும் கோனா எலெக்ட்ரிக் ஆகிய கார் மாடல்களுக்கு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலையில் நேரடி தள்ளுபடி, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் போன்றவை மூலமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக விற்பனையில் உள்ள சான்ட்ரோ காருக்கு ரூ35,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாகவும் பெற முடியும்.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.45,000 வரை சேமிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதில், ரூ.30,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சேமிப்பாகவும் வழங்கப்படுகிறது. இது நிச்சயம் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் வாங்குவோருக்கு சிறந்த சேமிப்பை வழங்கும்.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா சப்-காம்பேக்ட் செடான் காருக்கு ரூ.45,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.30,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சேமிப்பாகவும் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் ஐ20

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,000 வரை சேமிப்பு கொடுக்கப்படுகிறது. ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் பிரிமீயம் மற்றும் பிரிமீயம் டியூவல் டோன் என்று இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

முக்கிய விபரம்

ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் டீலர்கள் மூலமாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகளை பெற முடியும். மே 1 முதல் 31 வரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை பெற முடியும்.

Most Read Articles

English summary
Hyundai is offering attractive discounts on its select models for May 2021. The models that are covered under the offers include the Santro, Aura, Grand i10 Nios, i20 and the Kona EV. The benefits include cash discounts, exchange bonuses and corporate discounts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X