இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

சென்னை தொழிற்சாலையில் இருந்து 1 கோடியாவது காரை தயாரித்து வெளியே அனுப்பியது ஹூண்டாய் மோட்டார்ஸ். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரங்கேறியுள்ள இந்த நிகழ்ச்சியினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் சிறப்பு என்னவென்றால், தென் கொரியாவில் நிறுவிய தொழிற்சாலைகளுக்கு அடுத்து, வெளிநாட்டில் புது தொழிற்சாலையை திறக்க திட்டமிட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு தொழிற்சாலை இதுதான்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

1998, செப்டம்பரில் ஹூண்டாய் ஸ்ரீபெரும்பத்தூர் தொழிற்சாலையை திறந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், கிட்டத்தட்ட 23 வருடங்களாக இயங்கிவரும் இந்த தொழிற்சாலையில் முதல் தலைமுறை சாண்ட்ரோ, க்ரெட்டா, வென்யூ என சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அல்கஸார் வரையில் பல பிரபலமான கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஹூண்டாய் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், அதிகளவில் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. எந்த அளவிற்கு என்றால், இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதில் ஹூண்டாய் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், க்ரெட்டாவின் 3-இருக்கை வரிசை மாடலாக கொண்டுவரப்பட்ட அல்கஸாரின் விற்பனைக்கும் ஹூண்டாய் இந்த தமிழக தொழிற்சாலையை பெரிதும் சார்ந்துள்ளது.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

தற்போதைக்கு அல்கஸார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது இல்லை என்றாலும், விரைவில் இந்த பணிகள் துவங்கவுள்ளன. இந்த நிலையில் தற்போது ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள 10 மில்லியனாவது, அதாவது 1 கோடியாவது கார், அல்கஸார் ஆகும்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

பளபளப்பான கருப்பு நிறத்தில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருந்த இந்த 10 மில்லியனாவது காரில் (அல்கஸார்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கையெழுத்திட்டு, இந்த காருக்கு மேலும் சிறப்பை சேர்த்துள்ளார்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதல்வர், பின்னர் ஸ்ரீபெரும்புதூரில், இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் உள்ள ஹூண்டாயின் தொழிற்சாலைக்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ் கிம் உள்பட பல மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம். கார் தயாரிப்பில் மட்டுமின்றி சேவை மனப்பான்மையிலும் ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தை போன்று மற்ற நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு என கூறினார்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் கார்களின் தயாரிப்பில் 10 மில்லியன் என்ற இமாலய எண்ணிக்கையை எட்டியது குறித்து ஹூண்டாய் இந்தியா சிஇஓ எஸ்.எஸ்.கிம் கருத்து தெரிவிக்கையில், இது தமிழகத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கும், நாட்டை மேலும் தன்னம்பிக்கை பெற வைப்பதற்கும் உள்ள நமது பார்வையை வெளிப்படுத்துகிறது என தெரிவித்தார்.

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய்!! 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்!

ஆறு/ ஏழு-இருக்கை தேர்வுகளில் கிடைக்கும் அல்கஸார் எஸ்யூவி மூலம் க்ரெட்டாவின் வெற்றியை மீண்டும் ருசிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. தோற்றத்தில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், அல்கஸார் சற்று கூடுதல் நீளமானது.

Most Read Articles
English summary
Hyundai Rolled Out 10 millionth Car From Its Plant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X