ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ஆஸ்திரேலியா வெறும் 2 மணிநேரங்களில் அனைத்து விற்று தீர்க்கப்பட்டதால் நிறைவு பெற்றுள்ளது. அப்படி என்ன சிறப்பம்சங்கள் இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் காரில் உள்ளன? வாருங்கள் செய்திக்குள் போவோம்.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அயோனிக் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது துவங்கப்பட்ட இந்த காருக்கான முன்பதிவுகள் ஹூண்டாய் நிர்ணயித்த எண்ணிக்கையை எட்டியதால் வெறும் 2 மணிநேரங்களில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளன.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

ஹூண்டாய் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆஸ்திரேலியாவில் முதல் தொகுப்பாக நிர்ணயிக்கப்பட்ட 250 யூனிட் அயோனிக் 5 கார்கள் அனைத்தும் 2 மணிநேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கான விலையாக 71,900 ஆஸ்திரேலியன் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.40 லட்சத்தை தாண்டி செல்கிறது. இரண்டாவது தொகுப்பு அயோனிக் 5 எலக்ட்ரிக் கார்கள் எப்போது விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்பதை ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இன்னும் சில மாதங்கள் கழித்து 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

அதுவரை முன்பதிவு செய்ய முடியாமல் போனவர்களுக்கு அவ்வப்போது அப்டேட்களை வழங்க ஹூண்டாய் நிறுவனம் மறக்காது. 160 யூனிட் அயோனிக் 5 கார்கள் இரண்டாவது தொகுப்பில் நிர்ணயிக்கப்படலாம் என அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. எப்போது வந்தாலும் இதே வேகத்தில் 160 யூனிட்களும் முன்பதிவு செய்யப்படும்.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

ஏனெனில் ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 13,000க்கும் அதிகமானோர் இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் காரினை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் போக்குவரத்து எலக்ட்ரிக் மயத்திற்கு மாறி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா கொஞ்சம் வேகமாகவே உள்ளது.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

ஆஸ்திரேலியாவில், பின்சக்கர-ட்ரைவ் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் 72.6 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. பின்சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டில் ஒரே ஒரு என்ஜின் மட்டுமே காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

இந்த வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 218 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை பெறலாம். அனைத்து-சக்கர-ட்ரைவ் இல் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் முன் & பின் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 306 பிஎஸ் மற்றும் 605 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியவை.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

ஹூண்டாய் மோட்டார் க்ரூப்பின் E-GMP கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் அயோனிக் 5 ஆகும். இந்த 800 வாட் ப்ளாட்ஃபாரம் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை 350 கிலோவாட்ஸ் அல்ட்ரா-விரைவு சார்ஜரின் மூலம் 10%-வில் இருந்து 80% சார்ஜ் ஏற்ற வெறும் 17 வினாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பின்சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டில் 451 கிமீ ரேஞ்ச்சையும், அனைத்து-சக்கர-ட்ரைவ் வேரியண்ட்டில் சற்று குறைவாக 430 கிமீ அளவில் ரேஞ்ச்சையும் பெறலாம் என்கிறது ஹூண்டாய் நிறுவனம். அயோனிக் 5 இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2022இல் இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் இந்திய வருகை இருக்கலாம். இருப்பினும் சிபியூ முறையில், அதாவது முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனை செய்யப்படும்.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

இதனால் கூடுதல் வரியினை தவிர்ப்பதற்காக மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் (2,500 யூனிட்கள்) மட்டுமே இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. விலையிலும் பெரியதாக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. ரூ.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே நம் நாட்டிலும் அயோனிக் 5 காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் விரும்பும்.

ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் காரை போட்டிப்போட்டு வாங்கும் ஆஸ்திரேலியர்கள்!! இன்னும் 13,000 பேர் வெளியில்

இந்த எலக்ட்ரிக் காருக்கான எலக்ட்ரிக் பவர்ட்ரெயினை அமெரிக்காவை சேர்ந்த போர்க் வார்னர் நிறுவனம் சப்ளை செய்யலாம். ஏனெனில் இதற்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில் தான் ஹூண்டாய் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதனை போர்க் வார்னர் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Ioniq 5 electric car sold out in just 2 hours in Australia.
Story first published: Friday, October 15, 2021, 2:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X