ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை அட்டவணையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கபட்டு இந்தியா உள்பட வெளிநாட்டு சந்தைகளில் ஹூண்டாய் மொத்தம் 61,800 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 26.4 சதவீதம் அதிகமாகும்.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 48,910 ஹூண்டாய் கார்களே விற்கப்பட்டு இருந்தன, 50,000ஐ கூட தாண்டவில்லை. உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், 51,600 கார்களை இந்த தென்கொரிய நிறுவனம் இந்தியாவில் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

40,010 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் விற்கப்பட்ட 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை சுமார் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. நம் நாட்டில் ஹூண்டாயின் விற்பனைக்கு க்ரெட்டா தொடர்ந்து மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

கடந்த மாதத்தில் மட்டும் 12,428 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த எஸ்யூவி கார் அதிகளவில் விற்பனையாகும் ஹூண்டாய் கார் என்ற பெயர் மட்டுமில்லாமல், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

தற்சமயம் விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை க்ரெட்டா கடந்த ஆண்டில் மார்ச் மாதத்தின் மத்தியில் தான், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தலைத்தூக்க ஆரம்ப நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் அதன் முந்தைய பிப்ரவரி மாதத்தில் இந்த எஸ்யூவி காரை பெரும்பான்மையாக வாடிக்கையாளர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

இதன் காரணமாக 2020 பிப்ரவரியில் வெறும் 700 க்ரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது தற்போதைய 12,428 என்ற எண்ணிக்கை சுமார் 1675 சதவீதம் அதிகமாகும்.

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

க்ரெட்டா தவிர்த்து ஹூண்டாய் மோட்டார்ஸின் மற்ற வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி, க்ராண்ட் ஐ10, ஐ20 ஹேட்ச்பேக், அவ்ரா செடான், வெர்னா, டக்ஸன் மற்றும் எலண்ட்ரா கார்களின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

Rank Model Feb'21 Feb'20 Growth (%)
1 Hyundai Creta 12,428 700 1675
2 Hyundai Venue 11,224 10,321 9
3 Hyundai Grand i10 10,270 10,407 -1
4 Hyundai i20 9,001 8,766 3
5 Hyundai Aura 4,300 4,968 -13
6 Hyundai Santro 2,128 4,200 -49
7 Hyundai Verna 2,047 570 259
8 Hyundai Tucson 152 0 -
9 Hyundai Elantra 40 46 -13
10 Hyundai Kona 10 32 -69

Source: Autopunditz

ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஒரே ஒரு எலக்ட்ரிக் காரான கோனா 10 மாதிரிகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இதே பிப்ரவரியில் 32 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி 10,200 யூனிட்கள் உடன் 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Most Read Articles

English summary
Hyundai Model Wise Sales Feb 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X