என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் ஹூண்டாய் கார்களின் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 56,605 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் வெறும் 37,021 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இது 34.6 சதவீத வீழ்ச்சியாகும். இந்த வீழ்ச்சிக்கு செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார் என்ற பெருமையை வெனியூ பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8,828 ஆக இருந்த வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 10,554 ஆக உயர்ந்துள்ளது. இது 20 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் கிரெட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 14,023 ஆக இருந்த ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் வெறும் 6,455 ஆக குறைந்துள்ளது. இது 54 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் கிராண்ட் ஐ10 நியோஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 14,003 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 6,042 ஆக சுருங்கியுள்ளது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இது 57 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஐ20 நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 4,414 ஐ20 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 8,399 ஆக இருந்தது. இது 47 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் சாண்ட்ரோ ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 3,463 ஆக இருந்த சாண்ட்ரோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 2,877 ஆக குறைந்துள்ளது. இது 17 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் அவ்ரா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 5,577 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 2,701 ஆக குறைந்துள்ளது. இது 72 சதவீத வீழ்ச்சியாகும்.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்த பட்டியலில் வெர்னா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் 2,438 வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 2,166 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் அல்கஸார் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

நடப்பாண்டு அக்டோபரில் 1,392 அல்கஸார் கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த கார் நடப்பாண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் டூஸான் கார் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் வெறும் 87 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 119 ஆக உயர்ந்துள்ளது. இது 37 சதவீத வளர்ச்சியாகும். இதேபோல் பத்தாவது இடத்தை பிடித்துள்ள கோனாவும் விற்பனையில் 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 13 ஆக இருந்த கோனாவின் விற்பனை எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்த பட்டியலில் 11வது மற்றும் கடைசி இடத்தை எலாண்ட்ரா பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 46 ஆக இருந்த எலாண்ட்ரா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் வெறும் 11 ஆக குறைந்துள்ளது. இது 76 சதவீத வீழ்ச்சியாகும். செமி கண்டக்டர் பற்றாக்குறையே ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் மட்டுமல்லாது இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும் தற்போது செமி கண்டக்டர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஆனால் செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

என்ன இப்டி மோசமா போயிருச்சு... 'டல்' அடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

ஏற்கனவே கொரோனா வைரஸ், அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆட்டோமொபைல் துறைக்கு தற்போதைய செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை கூடுதல் தலைவலியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விற்பனையும் குறைவாகவே இருக்கிறது.

Most Read Articles

English summary
Hyundai model wise sales october 2021 venue leads chart
Story first published: Thursday, November 11, 2021, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X