ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு வருட இறுதி சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

இந்திய சந்தையில் மாதந்தோறும் அதிகளவில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹூண்டாய் அதன் கிராண்ட் ஐ10 நியோஸ், சாண்ட்ரோ, அவ்ரா மற்றும் ஐ20 கார்களுக்கு 2021ஆம் வருட இறுதி சலுகைகளை வழங்கியுள்ளது.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் அரசு & தனியார் நிறுவன ஊழியர்களுக்கான சலுகைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை மேற்கூறப்பட்டுள்ள ஹூண்டாய் மாடல்களின் வேரியண்ட்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற டிச.31ஆம் தேதி வரையில் அமலில் இருக்க உள்ள ஹூண்டாய் கார்களுக்கான இந்த சலுகைகளை பற்றி மாடல்கள் வாரியாக இனி பார்ப்போம்.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

கிராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யும் மாடலாக விளங்கும் கிராண்ட் ஐ10 நியோஸிற்கு இந்த டிசம்பர் மாதத்திற்கான சலுகைகள் ரூ.50,000 வரையில் வழங்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ என்ற இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளும், 1.2 லிட்டர் சிஆர்டிஐ என்ற ஒரு டீசல் என்ஜின் தேர்வும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

டிரான்ஸ்மிஷன் பணிகளை கவனிக்க 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த என்ஜினை பொறுத்து கொடுக்கப்படுகின்றன. இந்த மலிவான ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு கிடைக்கிறது. கிராண்ட் ஐ10 நியோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.28 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சம் வரையில் உள்ளன.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

ஹூண்டாய் சாண்ட்ரோ

க்ராண்ட் ஐ10 நியோஸை போல் சாலைகளில் பரவலாக தென்படும் சாண்ட்ரோ கார்களை புதியதாக வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் அதிகப்பட்சமாக ரூ.40,000 வரையில் சேமிக்கலாம். ஹூண்டாய் சாண்ட்ரோவில் 1.1 லிட்டர் எப்சிலான் எம்பிஐ பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது. அத்துடன் சிஎன்ஜி தேர்வும் கூடுதலாக உள்ளது.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

ஹூண்டாய் சாண்ட்ரோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.77 லட்சத்தில் இருந்து ரூ.6.75 லட்சம் வரையில் உள்ளன. விலை குறைவான காராக இருப்பினும், சாண்ட்ரோவில் ஓட்டுனர் காற்றுப்பை, ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதேநேரம் சாண்ட்ரோவின் டாப் ட்ரிம்களில், முன் இருக்கை பயணிக்கும் காற்றுப்பை, கேமிரா உடன் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், மைய லாக்கிங், பகல்/இரவு IRVM, வேகத்தை உணர்ந்து லாக் ஆகும் கதவுகள் மற்றும் பின்பக்க டீஃபாக்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

அவ்ரா

அவ்ரா செடான் மாடலின் பெட்ரோல் & டீசல் வேரியண்ட்கள் இந்த டிசம்பர் மாதத்திலும் ரூ.50,000 வரையிலான சலுகைகளை பெற்றுள்ளன. கிராண்ட் ஐ10 நியோஸ் காரை போல் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் தேர்வுகள், மற்றும் 1.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் தேர்வுடன் இந்த காம்பெக்ட் செடான் கார் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

அதேபோல் இந்த காருடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஹூண்டாய் கார்களை போல் அவ்ராவும் சிஎன்ஜி தேர்வில் கிடைக்கிறது. விற்பனையில் பெரிய அளவில் ஜொலிக்காத அவ்ரா செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6 லட்சத்தில் துவங்கி ரூ.9.36 லட்சம் வரையில் உள்ளன.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

ஐ20

நாம் இந்த லிஸ்ட்டில் பார்க்கும் விலைமிக்க ஹூண்டாய் காராக ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் விளங்குகிறது. டாடா அல்ட்ராஸ், மாருதி பலேனோ என மிகுந்த கவனத்தை பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டிவரும் ஐ20 மாடலுக்கு ரூ.40,000 வரையிலான சலுகைகளை ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் பெட்ரோல் & டீசல் என இரு விதமான வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

ரூ.50,000 வரையில் சேமிக்கலாம்!! ஹூண்டாய் கார்களுக்கான டிசம்பர் மாத சலுகைகள் - முழு விபரங்கள்!

கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ20 காரில் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ என்ற பெட்ரோல் என்ஜின் தேர்வுகளும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்படுகிறது. வேரியண்ட்டையும் மற்றும் அவற்றில் பொருத்தப்படும் என்ஜின் தேர்வுகளை பொறுத்தும் ஐ20 காரில் ஐவிடி, 7-ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Offers December 2021
Story first published: Sunday, December 5, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X