Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு!
பேட்டரியில் தொழில்நுட்ப பிரச்னையால் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதையடுத்து, உலக அளவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக ரேஞ்ச், தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் கோனா கார்களில் உள்ள பேட்டரியால் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறத் துவங்கின. உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்ட 15 ஹூண்டாய் கோனா கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் நாடான தென்கொரியாவில் 11 கோனா எலெக்ட்ரிக் கார்களும், கனடாவில் இரண்டு கார்களும், பின்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் தலா ஒரு கோனா எலெக்ட்ரிக் காரும் தீப்பிடித்தன.

இது உலக அளவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தென்கொரியா போக்குவரத்துத் துறை விசாரணை நடத்தியது. இதில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பேட்டரியில் உள்ள பிரச்னை காரணமாக தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

எனினும், பேட்டரி மேலாண்மைக்கான சாஃப்ட்வேரை ஹூண்டாய் மேம்படுத்தி கொடுத்தது. அதன்பிறகும், தீப்பிடிக்கும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளதால், கோனா எலெக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்க ஹூண்டாய் முடிவு செய்தது.

மேலும், கோனா கார்களுக்கு பேட்டரியை சப்ளை செய்த எல்ஜி கெம் நிறுவனத்துடனும் பேச்சு நடத்தியது. ஆனால், தாங்கள் தெரிவித்தபடி, சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பத்தை ஹூண்டாய் பின்பற்றவில்லை என்று எல்ஜி புகார் தெரிவித்தது.

எனினும், வாடிக்கையாளர்கள் நலன் கருதி, இரண்டு நிறுவனங்களும் உலக அளவில் விற்பனை செய்யப்பட்ட கோனா எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை மாற்றித் தருவதற்கு முடிவு செய்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட 82,000 கோனா எலெக்ட்ரிக் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

மேலும், பேட்டரியை மாற்றித் தரும் வரை, கோனா எலெக்ட்ரிக் காரில் 90 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் ஏற்ற வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை ஹூண்டாய் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. கோனா எலெக்ட்ரிக் கார்களில் புதிய பேட்டரியை மாற்றித் தருவதற்கு 900 மில்லியன் டாலர் அளவுக்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ரீகால் அறிவிப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.