ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900 கிமீ பயணிக்க முடியும் என்பதனை ஹூண்டாய் நெக்ஸோ கார் நிரூபித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கும் வீடியோ குறித்த தகவலைக் கீழே காணலாம்.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆஸ்திரேலியா குழு, உலகையே மிரள வைக்கும் வகையில் ஓர் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். இவர்கள் ஒரே ஒரு ஹூண்டாய் நெக்ஸோ காரின் டேங்கை ஃபில் செய்து சுமார் 900 கிமீ தூரம் வரை வலம் வந்திருக்கின்றனர்.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

இதுகுறித்த வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். நாங்க சொல்வதை எல்லாம் கேட்டால் உங்களுக்கு ஏதோ கதை சொல்வதைப் போன்று இருக்கலாம். ஆனால், இது உண்மையே. ஹூண்டாய் நிறுவனத்தின் நெக்ஸோ ஹைட்ரோஜனால் இயங்கக் கூடிய காராகும்.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

இது மின்சார வாகனத்தை போன்றே சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படக் கூடிய வாகனமாகும். அதாவது, இந்த வாகனம் நீராவியை மட்டுமே வெளியேற்றும். டீசல்-பெட்ரோல் வாகனங்களைப் போன்று காற்றை நஞ்சாக்கக் கூடிய கார்பன்களை இது வெளியேற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

முன்னதாக ஹூண்டாய் நெக்ஸோ 77 8கிமீ ரேஞ்ஜை வழங்கி உலகையே வியக்க வைத்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இம்முறை 887.5 கிமீ தூரத்தை நெக்ஸோ கடந்திருக்கின்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் ப்ரோகன் ஹில் பகுதியில் வைத்தே இந்த சாதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

முன்னதாக செய்யப்பட்ட சாதனை ஃப்ரென்ச் நாட்டின் பெர்ட்ரேண்ட் பிக்கார்ட் பகுதியில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. நெக்ஸோ ஹைட்ரஜன் திறன் கொண்ட காராக இருந்தாலும் இது மின்சாரத்தால் இயங்கும் வாகனம் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

ஆமாங்க, ஹைட்ரஜன் செரிக்கப்பட்டு மின்சார திறனாக மாற்றப்படும். இந்த திறனைக் கொண்டே நெக்ஸோ இயங்கும். ஆனால், ஹைட்ரஜனை முழுமையாக நிரப்ப ஒரு சில நிமிடங்களே போதும். 3 முதல் 5 நிமிடங்களே போதும். ஆகையால், மின்சார வாகனத்தைப் போன்று இது அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது.

ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் 900கிமீ போகலாம்... கதையல்ல நிஜம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!!

அவ்வாறு ஒரு முறை டேங்கை ஃபில் செய்தால் 660 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் ஹூண்டாய் அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில் இக்கார் 900கிமீ தூரம் வரை ரேஞ்ஜை வழங்கும் என்பது தெரியவந்திருக்கின்றது.

13 மணி நேரங்கள் 6 நிமிடங்களில் இந்த இடைவெளியை ஹூண்டாய் நெக்ஸோ கடந்திருக்கின்றது. மணிக்கு 66.9 கிமீ வேகத்தில் ஹூண்டாய் நெக்ஸோ இயக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா ஹூண்டாய் நிறுவன குழுவினர் கூறுகின்றனர். இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Nexo Hydrogen Fuel Car Sets World Record By Travelling Nearly 900 KM's. Read In Tamil.
Story first published: Friday, May 14, 2021, 18:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X