அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான புதிய டிவிசி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

ரஷ்ய நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டிவிசி (தொலைக்காட்சி கமர்ஷியல்) வீடியோவினை தான் ஹூண்டாய் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

இந்தியாவில் க்ரெட்டாவின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இரண்டாம் தலைமுறை க்ரெட்டா அறிமுகமாகியது. குறிப்பிடத்தக்க அளவில் கொண்டுவரப்பட்ட அப்டேட்களினால் இந்தியாவில் க்ரெட்டா கார்களின் விற்பனை அறிமுகத்தில் இருந்து உச்சத்தில் இருக்கிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

நம் நாட்டு சந்தையில் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களாக காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை நேரடியாக பார்க்க முடிகிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

குறிப்பாக முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள புத்துணர்ச்சியான தோற்றத்தை இந்த டிவிசி வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. க்ரில் பகுதி அளவில் சிறியதாக்கப்பட்டது போல் தோன்றலாம். ஏனெனில் முன்பக்க க்ரில் அமைப்பின் வடிவத்திலும், அளவிலும் ஹூண்டாய் நிறுவனம் நிச்சயமாக தீவிரமாக பணியாற்றி உள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

க்ரில் அமைப்பில் வழங்கப்பட்டு வந்த கிடைமட்டமான க்ரோம் ஸ்லாட்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த க்ரில் செட்-அப் நமக்கு ஹூண்டாயின் சமீபத்திய அறிமுகமான அல்கஸாரை ஞாபகப்படுத்துகிறது. க்ரெட்டாவின் முன் பம்பர் & சில்வர் நிற சறுக்கு தட்டின் வடிவம் கூட திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

ஒட்டுமொத்தமாக க்ரெட்டா எஸ்யூவி காரின் தோற்றம் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் கூடுதல் நேர்த்தியானதாக உள்ளது. பக்கவாட்டில் புதிய அலாய் சக்கரங்களை தவிர்த்து பெரியதாக வேறெந்த மாற்றமும் இல்லை. பின்பக்க பம்பர் மற்றும் பின்பக்க கதவின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. இவை தற்போது இன்னமும் அருமையானவைகளாக விளங்குகின்றன.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

மற்றப்படி உட்புறத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இந்த டிவிசி வீடியோவில் இந்த ரஷ்ய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் முற்றிலும் கருப்பு & பழுப்பு நிறத்தில் கேபினை கொண்டுள்ளதை பார்க்கலாம். இதேபோன்றதான கேபினை நம் நாட்டில் விற்பனையில் உள்ள அல்கஸாரிலும் பார்க்க முடியும். அல்கஸார், க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனாகும்.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

ரஷ்யாவில் க்ரெட்டாவை இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் ஒன்றான 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 123 எச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மற்றொரு 2.0 லிட்டர் என்ஜின் 150 பிஎஸ் மற்றும் 191 என்எம் டார்க் திறன் வரையில் வழங்கக்கூடியது.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றன. ரஷ்ய நாட்டு சந்தையில் அனைத்து-சக்கர-ட்ரைவ் பவர்ட்ரெயினும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் முன்-சக்கர-ட்ரைவ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இங்கு க்ரெட்டா எஸ்யூவி 3 விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரொல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் என்பவை இந்த 3 என்ஜின் தேர்வுகளாகும். நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

அறிமுகத்திற்கு தயாராகும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்!! இந்தியா கொண்டுவர வாய்ப்பிருக்கா!

டீசல் என்ஜின் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இதனுடன் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 140 பிஎஸ் மற்றும் 242 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் இணைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் க்ரெட்டாவிற்கு கியா செல்டோஸ் முக்கிய போட்டியாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Creta Facelift New TVC shows the SUV inside out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X