டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அதன் எதிர்கால 7-இருக்கை எம்பிவி காரான கஸ்டோவின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஹூண்டாய் எம்பிவி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

பீஜிங் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து கஸ்டோ எம்பிவி காரை இந்த தென்கொரிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த ஹூண்டாய் எம்பிவி காரின் டீசர் படங்கள் பிராண்டின் சமுக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

இந்த படங்களில் காரின் தோற்றத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக பார்க்க முடிகிறது. ஏனெனில் கஸ்டோவின் தோற்றம் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில் மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறை அமைச்சகத்தின் இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த போது கசிந்திருந்தது.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

ஹூண்டாய் டக்ஸன் காரை அடிப்படையாக கொண்டு நகர்த்தக்கூடிய கதவுகளுடன் உருவாக்கப்படும் 7-இருக்கை மினிவேன் கஸ்டோ ஆகும். டக்ஸன் காரில் வழங்கப்படும் சிக்கலான முன்பக்க ஹெட்லேம்ப் மற்றும் பின்பக்க டெயில்லேம்ப்களை இணைக்கும் லைட் பாரை கஸ்டோ எம்பிவி வாகனமும் கொண்டுள்ளது.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

ஆனால் டெயில்லேம்ப்கள் வித்தியாசமாக C-வடிவில் உள்ளன. ஹூண்டாய் பிராண்டின் உலகளாவிய எம்பிவி வரிசையில் ஸ்டாரியாவிற்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ள கஸ்டோ நேர்த்தியான தோற்றத்தினால் எம்பிவி காராக இருப்பினும், க்ராஸ்ஓவர் போன்று காட்சியளிக்கிறது.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

4.95 மீட்டரில் நீளம் கொண்டதாக விளங்கும் ஹூண்டாய் கஸ்டோவின் அகலம் 1.85 மீட்டராகவும், உயரம் 1.73 மீட்டராகவும் அளவிடப்பட்டுள்ளது. மற்றப்படி காரில் வழங்கப்பட உள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

தொழில்துறை அமைச்சகத்தின் வெப்சைட்டில் கஸ்டோ 7-இருக்கை எம்பிவி காரில் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் ஆற்றல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கப்படும்.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் கஸ்டோவில் எதிர்பார்க்கலாம் கூறப்படுகிறது. அதிகப்பட்சமாக 236 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜினும் ஆற்றலை முன் சக்கரங்களுக்கு வழங்கும் என தெரிகிறது.

டக்ஸனின் அடிப்படையில், 7-இருக்கை எம்பிவி காரை உருவாக்கும் ஹூண்டாய்!! முழுக்க முழுக்க சீன சந்தைக்காக

இந்திய சந்தைக்கு ஹூண்டாய் கஸ்டோ விற்பனைக்கு வர வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் முழுக்க முழுக்க சீன சந்தைக்காக இந்த எம்பிவி கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய சந்தைக்காக விற்பனையில் சக்கப்போடு போட்டுவரும் க்ரெட்டாவின் அடிப்படையில் எம்பிவி கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

Most Read Articles

English summary
Hyundai Custo 7-Seater MPV Officially Teased – Debut Soon.
Story first published: Wednesday, July 28, 2021, 23:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X