இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் செவன் கான்செப்ட் (Seven Concept) எனும் மின்சார எஸ்யூவி ரக காரை முதல் முறையாக வெளியீடு செய்துள்ளது. 2021 எல்ஏ மோட்டார் ஷோவில் காட்சிக்குள்ளாகியிருக்கும் இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), அதன் எதிர்கால வாகன மாடல் ஒன்றை முதல் முறையாக வெளியீடு செய்துள்ளது. செவன் கான்செப்ட் (Seven Concept) எனும் முன்மாதிரி மாடலையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ளது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த வாகனத்தை ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், இதன் வெளியீடு மின் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அவர்கள் மத்தியில் இதன் வெளியீடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் 2024ம் ஆண்டிலேயே உற்பத்தி மற்றும் விற்பனையைச் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐயோனிக் 7 (Ioniq 7) காரும் 2024ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், 2024ம் ஆண்டின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்கள் மத்தியிலும் சற்றே அதிகரித்து காணப்படுகின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய செவன் கான்செப்ட், கியாவின் இவி9 காரை தழுவி உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் நிறுவனமே கியா ஆகும். நிறுவனத்தின் எலெக்ட்ரிக்-குளோபல் மாடுலர் பிளாட்பாரத்தை (Electric-Global Modular Platform) பயன்படுத்தியே புதிய மின்சார உருவாக்கப்பட இருக்கின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

புதிய செவன் கான்செப்ட் முற்றிலும் விநோதமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அமைப்பு எதிர்காலத்திற்கு உகந்த வாகனம் இது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. முழு நீளமான உருவம், பெரிய காற்று உள் வாங்கும் துளைகள், பிக்சல் மின் விளக்குகள் உள்ளிட்டவற்றால் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

தற்போது கான்செப்ட் மாடல் பற்றி வெளியாகியிருக்கும் புகைப்படங்கள், அக்கார் மிக அதி நவீன வசதிகளுடன் உருவாகி இருப்பதை வெளிக்காட்டுகின்றது. காரின் உட்பக்கம் ஓர் மினி பாரை கொண்டிருப்பதை போன்ற அமைப்பை பெற்றிருக்கின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

குறிப்பாக இதன் கதவுகள் வேற லெவலில் உருவாக்கப்பட்டு உள்ளன. பார்களில் பாட்டில்களை அடுக்கி வைக்கும் அலமாறியைப் போல் அது காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, காரின் உட்பக்க முன் பக்கத்தில் வெவ்வேறு விதமான அமைப்புகள் கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

அதில், ஒன்று பயணி முழுமையாக அமர்ந்து செல்லும் வகையிலும், மற்றொன்று கால்களுக்கு ஓய்வளிக்கும் குஷன் இருக்கையைப் போன்றும் காட்சியளிக்கின்றன. எனவே முழுக்க முழுக்க சொகுசு வசதியை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த வாகனம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

இத்துடன், காரின் முன் பக்கத்தில் ஸ்டியரிங் வீல் வழங்கப்படாததையும் நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இது ஓர் தானியங்கி வசதிக் கொண்ட காராக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது. இதன்படி, இலக்கை நிர்ணயித்த பின்னர் அதுவே நம்மை சேரும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் தொழில்நுட்பம் இக்காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

காரின் வெளிப்புறமும் அதிக கவர்ச்சியானதாக இருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான மற்றும் புதிய தோற்றத்திலான வீல், இரு முனைகள் கொண்ட வீட்டு கதவைப் போல் திறக்கும் டூர்கள், சுற்றிலும் எல்இடி மின் விளக்குகள் ஆகியவை செவன் கான்செப்ட் மாடலில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

தொடரந்து, இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான பொருட்கள் மறு சுழற்சி செய்யக் கூடியவை என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இந்த காரை ஸ்கிராப் செய்யும்போது எந்த பொருளும் வீண் என்ற நிலைக்கு தள்ளப்படாது என்பது தெரிகின்றது. எனவே இருக்கும்போதும், தூக்கி எறியும்போது அதிக பயன்களை இது வழங்கும்.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

காருக்குள் நீளமான அமைப்பு கொண்டி திரை வழங்கப்பட்டிருக்கின்றது. காருக்குள் வழங்கப்படும் பன்முக அம்சங்களை இதன் வாயிலாகவே கட்டுப்படுத்த முடியும். மேலும், இந்த காரில் வீட்டில் இருப்பதைப் போன்று உணர்வை வழங்கும் விதமாக செருப்புகளை அடுக்கி வைக்கும் பெட்டி வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இப்படி ஒரு காருக்காக எத்தன வருஷம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்! Hyundai Seven Concept வெளியீடு!

மேலே கூறியதைப் போல இது ஓர் மின்சார கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 483 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் உற்பத்தி மாடல் கூடுதல் ரேஞ்ஜ் திறனில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், வெறும் 20 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது.

குறிப்பு: 4,5,6 மற்றும் 13 ஆகிய படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Hyundai unveil new electric suv seven concept at la motor show 2021
Story first published: Thursday, November 18, 2021, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X