Just In
- 26 min ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 41 min ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 1 hr ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 2 hrs ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் எது? விட்டாரா ப்ரெஸ்ஸாவையே ஓரம்கட்டிய ஹூண்டாய் கார்!
அதிகம் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரான மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காரையே ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2021 ஏப்ரல் விற்பனையில் ஓரம் கட்டியிருக்கின்றது. இக்கார் குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் வென்யூ-வும் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். சிறந்த மைலேஜ், உயரமான இருக்கை மற்றும் பரந்த கார்கோ இட வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சிறிய உருவமுடைய காரே சப்-காம்பேக்ட் எஸ்யூவி ஆகும்.
இந்த பிரிவிலேயே ஹூண்டாய் வென்யூ அதிகம் விற்பனையைப் பெறும் வாகனமாக உருவாகியுள்ளது. பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நல்ல விற்பனை வளர்ச்சியை இக்கார் பெற்றிருப்பது இந்திய வாகன சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெகு நீண்ட நாட்களாக மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காரே சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் அதிகம் விற்பனையாகும் காராக இருந்தது. இதனால், இப்பிரிவின் தலைவனாகவே அது மாறியது. இந்த இடத்தையே தற்போது ஏப்ரல் 2021 விற்பனையில் ஹூண்டாய் வென்யூ தட்டி பறித்துள்ளது.
2021 ஏப்ரலில் ஹூண்டாய் நிறுவனம் 11,245 யூனிட் வென்யூ கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது. மாருதி சுசுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா காரோ 11,220 யூனிட்டுகளை விற்பனை செய்திருக்கின்றது. வெறும், 25 யூனிட்டுகள் அதிகம் விற்பனையான காரணத்தினால் வென்யூ தலைவன் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.
ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காருக்கு மட்டுமின்றி மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கும் போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.
இ, எஸ், எஸ்ப்ளஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்ப்ளஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய ஆறு விதமான வேரியண்டுகளில் ஹூண்டாய் வென்யூ விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. மேலும், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 6.92 லட்சம் என்ற விலையில் விற்பனைக்ககுக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 11.76 லட்சம் ஆகும்.
ஹூண்டாய் வென்யூ ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளிலே ஹூண்டாய் வென்யூ விற்கப்பட்டு வருகின்றது.
இதுதவிர, சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், டயர் ப்ரஸ்ஸர் மானிட்டர் சிஸ்டம், டெலிமேட்டிக் ஸ்விட்சுகள், ஹெட்லேம்ப் எஸ்கார்ட் தொழில்நுட்பம், ஆறு ஏர் பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வசதி என எக்கசக்க அம்சங்கள் வென்யூவில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுபோன்ற பன்முக வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வென்யூ பெற தொடங்கியுள்ளது. இதன் விளைவாக 2021 ஏப்ரலில் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காராகவும் இது மாறியிருக்கின்றது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!