இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான வென்யூ (Venue) கார், காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் வென்யூ (Venue)-வும் ஒன்று. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இப்பிரிவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் முதன்மையான கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த காரே தற்போது விற்பனையில் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றது. 2 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் என்ற விற்பனை மைல்கல்லை அது எட்டியிருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் முதல் முறையாக 2019ம் ஆண்டு மே 21ம் தேதி அன்றே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

அந்தவகையில் பார்த்தால் இக்கார் நாட்டில் விற்பனைக்கு வந்து 31 மாதங்களுக்கும் குறைவான மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே 2.50 லட்சம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க விற்பனை சாதனையை வென்யூ கார் இந்தியாவில் பெற்றிருக்கின்றது. தற்போது, இக்கார் இந்திய சந்தையில் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்ச நிலை வேரியண்ட் ரூ. 11.10 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகின்றது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்த முதல் ஆறு மாதங்களிலேயே 50 ஆயிரம் யூனிட் விற்பனை என்ற வரலாற்று மைல்கல்லை எட்டிய வாகனம் ஆகும். இந்த விற்பனை வளர்ச்சி தற்போதும் வென்யூ காருக்கு தொடர்ந்து வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வென்யூ காரின் சேல்ஸ் நிலவரம் பற்றி வெளி வந்திருக்கும் தகவல் அமைந்திருக்கின்றது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

ஹூண்டாய் வென்யூ விற்பனைக்கு வந்த முதல் 15 மாதங்களிலேயே 1 லட்சம் யூனிட் விற்பனையையும், 25 மாதங்களில் 2 லட்சம் யூனிட்டுகளும், தற்போது 31 மாதங்களில் 2.50 லட்சம் யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றது. இக்கார் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்து வரும் பிற எஸ்யூவி கார் மாடல்களான மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

ஹூண்டாய் வென்யூ மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே வென்யூ விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

இதன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். மூன்றாவது தேர்வாக இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். ஹூண்டாய் நிறுவனம் இக்காரை அதன் பிரபல கார் மாடல்களில் ஒன்றான க்ரெட்டாவின் அடிப்படைத் தோற்றத்தை தழுவி உருவாக்கியிருக்கின்றது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

இதற்கு வென்யூவின் முகப்பு பகுதியே சான்று. தொடர்ந்து, காரின் உட்பக்கம் ஓர் நண்பனை போல் விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருகின்றது. மிக சீரான வடிவமைப்புடன் காட்சியளிக்கும் இதன் உட்பக்கத்தில் 8 இன்ச் அளவிலான தொடுதிரை வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இன்னும் பல சிறப்பு அம்சங்களை வென்யூக் கொண்டிருக்கின்றது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

அந்தவகையில், புளூலிங்க் கார் இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஸ்டியரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எல்இடி பகல்நேர மின் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் போன்ற பன்முக பிரீமியம் வசதிகள் வெனியூ காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல் இக்கார் அதிகளவு இட வசதி மற்றும் பூட் ஸ்பேஸ் கொண்ட வாகனமாகவும் காட்சியளிக்கின்றது.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

குறிப்பாக, இது அதிக லேக்ரூம் வசதியைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், கிளாஸ் லீடிங் காராக இது காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க அதிக பாதுகாப்பு வசதிளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வென்யூவில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, இதன் இ மற்றும் எஸ் ட்ரிம்மில் கூடுதல் சிறப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையா? காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் தரமான சம்பவம் செய்த Hyundai Venue!

இதுபோன்ற காரணங்களினாலேயே ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்த 31 மாதங்களில் 2.5 லட்சம் யூனிட் விற்பனை என்ற மகத்தான சாதனையைப் படைத்திருக்கின்றது. மேலும், இந்த கார் சிறந்த ரீசேல் மதிப்பு கொண்ட வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. இதுவும் இக்கார் பல மடங்கு அதிக விற்பனையைப் பெற காரணமாக இருக்கின்றது. இந்த காரின் புதிய விற்பனை வரலாற்று சாதனை ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai venue compact suv crosses 2 5 lakh sales milestone with in 31 months
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X