இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கியா கேரன்ஸ் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

கியா இந்தியா நிறுவனம் உள்ளூர் சந்தைக்காக புத்தம் புதிய எம்பிவி ரக கார் ஒன்றை கடந்த சில மாதங்களாகவே சோதனை செய்து வருகிறது. இதுதான் கியா இந்தியா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் (Kia Carens) என்ற பெயரில் இந்த எம்பிவி கார் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

கியா கேரன்ஸ் எம்பிவி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த கார் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அனைவரும் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக கியா கேரன்ஸ் கார் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

எப்போது விற்பனைக்கு வரும்?

கியா கேரன்ஸ் எம்பிவி கார் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது 2022ம் ஆண்டு ஜனவரி-மார்ச் இடையிலான காலகட்டத்தில் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இது இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் 4வது காராக இருக்கும்.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

கியா நிறுவனம் இங்கு ஏற்கனவே செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் வரும் காலங்களில் எம்பிவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அதை பயன்படுத்தி கொள்ளும் விதமாக கியா நிறுவனம் கேரன்ஸ் எம்பிவி காரை அறிமுகம் செய்யவுள்ளது.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

வெளிப்புற டிசைன்!

கியா கேரன்ஸ் கார், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் கியா நிறுவனம் தற்போது பின்பற்றி வரும் டிசைன் கொள்கையை இது அடிப்படையாக கொண்டிருக்கும். சாலையில் சோதனை செய்யப்பட்டு வரும் கார்களில் பெரும்பாலான டிசைன் அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

இருப்பினும் ஷார்ப் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், எல்இடி பகல் நேர விளக்குகள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் அகலமான சென்ட்ரல் ஏர் இன்டேக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து கார்களுமே டிசைனில் கவர்ச்சியாக இருக்கின்றன. அந்த வகையில் கேரன்ஸ் காரும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

உட்புறம்!

கியா கேரன்ஸ் எம்பிவி காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

இன்ஜின்!

கியா கேரன்ஸ் எம்பிவி காரில், 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், டீசல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. கியா செல்டோஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார்களிலும் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

இதுதவிர 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் கியா கேரன்ஸ் காரில் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹூண்டாய் அல்கஸார் காரில் வழங்கப்படும், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும், கியா கேரன்ஸ் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

அதே நேரத்தில் கியா கேரன்ஸ் எம்பிவி கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் உடன் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறைய இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பத்தையும் பூர்த்தி செய்ய முடியும். இது விற்பனையை உயர்த்துவதற்கான நல்ல வழிமுறை.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

எதிர்பார்க்கப்படும் விலை!

கியா கேரன்ஸ் எம்பிவி காரின் ஆரம்ப விலை 11.50 லட்ச ரூபாயாக இருக்கலாம் எனவும், இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களுக்கு கியா கேரன்ஸ் கடுமையான போட்டியை வழங்கும்.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கியா கேரன்ஸ் விற்பனையில் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இவை தற்போதைக்கு வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஆகும். டிசம்பர் மாதம் வெளியிடப்படும்போது கியா கேரன்ஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு தெரியவரும்.

இப்பவே வாங்கணும் போல இருக்கு... சூப்பரான விலையில் வரப்போகும் கியா கேரன்ஸ் கார்... கிலியில் மாருதி, மஹிந்திரா!

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, இந்த காரின் விலை உள்பட அனைத்து தகவல்களும் நமக்கு முழுமையாக தெரிய வந்து விடும். கியா நிறுவனம் தற்போது வரை அறிமுகம் செய்துள்ள அனைத்து கார்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் கியா கேரன்ஸ் காருக்கும் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Important details about upcoming kia carens mpv
Story first published: Wednesday, November 17, 2021, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X