புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் வரும் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய மாடல்களில் ஒன்றாக இருந்த சஃபாரி பெயரில் இந்த புதிய மாடல் வர இருப்பது பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

டாடா சஃபாரி எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், 18 அங்குலத்தில் டியூவல் டோன் மெஷின் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 9.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது. ஐரா கனெக்டெட் கார் வசதியை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனத்தின் இ-சிம் கார்டு முதன்மையான செயல்பாடுகளை வழங்குவதற்கும், பிஎஸ்என்எல் சிஎம் கார்டு அவசர சமயத்திற்கான இ-சிம் கார்டாகவும் வழங்கப்பட உள்ளது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

இந்த காரில் 9 ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்பிளிஃபயர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. உட்புறத்தில் உள்ள ரியர் வியூ கேமரா ஆட்டோ டிம்மிங் வசதியை பெற்றிருக்கும். புஷ் பட்டன் ஸ்டார்ட், சன்ரூஃப், கர்டெயின் ஏர்பேக்குகளும் இடம்பெறுகின்றன.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐரா கனெக்கெட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படும். கார் இருப்பிடத்தை கண்டறியும் வசதி, கார் செல்லும் இடத்தை துல்லியமாக கண்டறியும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

ஓட்டுதல் முறை குறித்த தரவுகளை வழங்கும் வசதி, கார் பழுது உள்ளிட்டவற்றை தெரிவிக்கும் வசதி, கார் திருடு போனால், அதன் எஞ்சின் இயக்கத்தை நிறுத்தும் வசதி, கதவுகளை ரிமோட் முறையில் மூடி, திறக்கும் வசதி, நேரடியாக அப்டேட் செய்யும் வசதிகளை பெற முடியும்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்படும். இந்த மாடல் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் இருக்கை வசதி கொண்ட தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கிக் கொள்ளும் வசதி இடம்பெறுகிறது. 7 சீட்டர் மாடலில் இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கும் வசதி இருக்கும். உயர் வேரியண்ட்டுகளில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட உள்ளது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். வரும் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த காரின் உற்பத்தியும் துவங்கி உள்ளது.

Most Read Articles
English summary
Here are some important features of all new Tata Safari SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X