இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

உலகின் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஒருவழியாக இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருப்பதை டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. மூன்று இயக்குனர்கள் கொண்ட குழுவுடன் இந்தியாவில் தலைமையகத்தை பெங்களூரில் அமைத்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை உறுதியான நிலையில், அந்த நிறுவனம் இந்தியா கொண்டு வர இருக்கும் கார்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான மாடல் 3 எலெக்ட்ரிக் செடான் கார்தான் இந்தியாவில் முதல் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள அடுத்த மாடல் குறித்தும் பரபரப்பு கிளம்பி உள்ளது.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

அதாவது, மாடல் 3 போன்றே டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான தேர்வாக இருந்து வரும் மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஏனெனில், இந்தியாவில் எஸ்யூவி வகை கார்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, இந்தியாவில் வர்த்தகத்தை வலுவாக துவங்குவதற்கு மாடல் ஒய் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று டெஸ்லா நிறுவனம் கருதுகிறது. இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கச்சிதமாக பூர்த்தி செய்யும் என்றும் நம்பலாம்.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஸ்டான்டர்டு, லாங் ரேஞ்ச் ஆல் வீல் டிரைவ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் என மூன்று வேரியண்ட்டுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் இரண்டு வேரியண்ட்டுகளும் 7 சீட்டர் மாடலாகவும், கடைசி வேரியண்ட் 5 சீட்டர் மாடலாகவும் கிடைக்கிறது.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இதில், ஸ்டான்டர்டு மாடலானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த 7 சீட்டர் தேர்வு என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக இந்தியர்கள் கருத முடியும்.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரில் மிகச் சிறந்த மின் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலானது மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. மேலும், 0 - 96 கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டிவிடும்.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

டெஸ்லா மாடல் ஒய் காரில் திறன் வாய்ந்த பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. மாடல் ஒய் ஸ்டான்டர்டு மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 392 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். லாங் ரேஞ்ச் வேரியண்ட் பேட்டரி 487 கிமீ தூரம் வரையிலும், பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட் பேட்டரி 527 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

 இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய டெஸ்லா மாடல் ஒய் கார் இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கலாம். இந்த கார் விற்பனைக்கு வந்தால், பல ஆரம்ப ரக சொகுசு கார்களுக்கு கடும் போட்டி ஏற்படும்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Important Things About Tesla Model Y Electric SUV.
Story first published: Tuesday, January 19, 2021, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X