நாட்டின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்! கெத்தான சம்பவத்தை செய்த டாடா!

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரான டாடா நெக்ஸான் இவி இனி இந்தியாவில் மட்டுமின்றி வேறொரு நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

இந்தியாவின் மலிவு விலை மின்சார காராக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி விற்பனையில் இருந்து வருகின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களில் ஒன்றான இதனை நிறுவனம் மற்றுமொரு நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலேயே டாடா நெக்ஸான் இவி கார் களமிறக்கப்பட்டிருக்கின்றது. அங்கு அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 35.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 22.50 லட்சம் ஆகும்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

டாடா நெக்ஸான் இவி தற்போது நாட்டில் எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட்ப்ளஸ் லக்ஸ், டார்க் எக்ஸ்இசட் ப்ளஸ், டார்க் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், டார்க் எனும் இரு தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் மிக சமீபத்திலேயே அறிமுகப்படுத்தியது.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

வழக்கமான எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ப்ளஸ் லக்ஸ் ஆகிய தேர்வுகளை அடர் கருப்பு நிறத்தில் வழங்கும் நோக்கில் இத்தேர்வுகள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நேபாளத்தில் எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட்ப்ளஸ் லக்ஸ் ஆகிய ட்ரிம்கள் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

அனைத்து வேரியண்ட் நெக்ஸான் இவிக்கும் எட்டு வருடங்கள் அல்லது 1.60 லட்சம் கிமீ தூரம் என்ற வாரண்டியை வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இது பேட்டரிக்கான வாரண்டி காலம் ஆகும். மின்சார வாகனங்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிமீ தூரம் என்ற வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

புதிய கூட்டணியின் வாயிலாகவே டாடா மோட்டார்ஸ் அதன் மின்சார கார்களை விற்பனைச் செய்ய இருக்கின்றது. நேபாளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சிப்ரடி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இதற்காக டாடா கூட்டு சேர்ந்திருக்கின்றது.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

எதிர்காலத்தில் இன்னும் சில மின்சார கார்களை நேபாளத்தில் விற்பனைக்குக் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், இத்திட்டத்தை முன்னிட்டு நேபாளத்தில் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இனி மற்றொரு நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்... கெத்தான சம்பவத்தை செய்த டாடா! அந்த நாட்டில் இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

நாட்டின் அமோகமான விற்பனையைப் பெறும் மின்சாராக நெக்ஸான் இவி இருக்கின்றது. தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த மின்சார கார் நல்ல விற்பனையைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,716 யூனிட் நெக்ஸான் இவி-க்கள் விற்பனையாகியிருக்கின்றன. டாடா நெக்ஸான் இவி குறித்த மேலும் பல சுவாரஷ்ய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

குறிப்பு: கடைசி மூன்று படங்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கம் டார்க் எடிசன் நெக்ஸான் இவி கார்களின் படம்.

Most Read Articles

English summary
India's Most Affordable e-Car Tata Nexon EV Launched In Nepal. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X