பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

வாகன உற்பத்தியாளர்கள் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தயாராகி வருவதால், வழக்கமான ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை வரும் ஆண்டுகளில் நிறுத்தலாம் என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

மேலும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நாலு கால் பாய்ச்சலில் மாற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது வேகமாகவும், தெளிவான தேர்வாகவும் இருக்கும் எனவும் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

பேட்டரி உற்பத்திக்கான செலவு குறைந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது இன்னும் எளிமையாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை வெற்றிகரமானதாக மாற்றும் வல்லமை இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருப்பதாகவும் அமிதாப் காந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை நடப்பாண்டு மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எலெக்ட்ரிக் கார் விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முன்னணியில் இருக்கிறது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

அதேபோல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன விற்பனையில் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இது பெரும்பாலும் வர்த்தக வாகனங்களையே உள்ளடக்கியுள்ளது. இதுதவிர ஏராளமான எலெக்ட்ரிக் டூவீலர்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த உதாரணம். எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வருகைதான், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்த வருடத்தின் மிக முக்கியமான ஹைலைட் ஆகும். ஆனால் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி முழு வீச்சில் நடந்து வருகிறது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

எனவே டெலிவரி பணிகள் தொடங்கப்படும் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி வரும் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளது. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து விட்டு ஆர்வத்துடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!

இனி வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை, டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் போன்ற தயாரிப்புகள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

Most Read Articles

English summary
Indian automobile industry should jump over to electric mobility soon amitabh kant
Story first published: Tuesday, December 7, 2021, 0:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X