காரின் பின் இருக்கையில் அமர்ந்து சென்றதற்காக அமெரிக்கா வாழ் இந்தியர் கைது! இது 2வது முறை! மானத்த வாங்கிட்டாரு!

காரில் வழங்கப்பட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி, பின் இருக்கையில் அமர்ந்து சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரை அமெரிக்க போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

அமெரிக்கா வாழ் இந்தியர் பரம் ஷர்மா. இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள சேன் பிரான்சிஸ்கோவில் வசதித்து வருகின்றார். பலருக்கு சொகுசு கார்களுக்கு சொந்தக்காரரான இவர் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றார். இது ஓர் மின்சார கார் மட்டுமல்ல பல்வேறு சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும் சொகுசு காரும்கூட.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கி டிரைவர் வசதி இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே இக்காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சமாகும். இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதின் வாயிலாக டிரைவர் இல்லாமல் டெஸ்லா காரில் பயணிக்க முடியும். இந்த தானியங்கி வசதியை தனது அனைத்து மாடல் மின்சார கார்களிலும் டெஸ்லா வழங்கி வருகின்றது.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காகவே அமெரிக்க வாழ் இந்தியரை சேன் பிரான்சிஸ்கோ போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றார். முன்னதாகவும் இவர் இதே போன்று இந்த ஸ்டண்டை செய்ததற்காக ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

இந்த நிலையிலேயே பரம் ஷர்மா மீண்டும் அதே ஸ்டண்டை பொது சாலையில் வைத்து செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்தே காவலர்கள் அவரை தற்போது கைது செய்திருக்கின்றனர். 25 வயதான பரம் ஷர்மா அமெரிக்காவில் மிகந்த சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்தியர் ஆவார்.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

தனது பகட்டான வாழ்க்கைகுறித்த வீடியோவை அவர் அவ்வப்போது வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில், டெஸ்லா காரில் சொகுசான முறையில், டிரைவர் யாரும் இல்லாமல் செல்லக்கூடிய வீடியோவை வெளியிட்டதன் காரணத்தினாலேயே தற்போது காவலர்களின் நடவடிக்கை வலையில் சிக்கியிருக்கின்றார்.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

வீடியோவில், டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாதநிலையில் பரம் ஷர்மா மட்டும் பின்னிருக்கையில் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காட்சி அனைத்து சமூக வலை தளங்களில் வைரலாகியதை அடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

முன்னதாக, தனது வீடியோவை பதிவிட்ட அந்த இளைஞர், "நீங்கள் இந்த காரை உங்களால் அவ்வளவு எளிதில் வாங்கிவிட. நீங்க எல்லாம் ஏழைகள். உங்களால் இக்காரை அவ்வளவு சுலபத்தில் வாங்க இயலாது" என பிறரை எரிச்சலூட்டும் வகையில் பிதற்றல் பதிவுகளை வெளியிட்டிருக்கின்றார்.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது அவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இது ஒட்டுமொத்தமாக அவரின் இமேஜை ஸ்பாயில் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அவரை மட்டுமல்ல நம்மை போன்ற இந்தியர்கள் சிலரின் இமேஜையும் ஸ்பாயில் செய்யும் வகையிலேயே இளைஞரின் பிதற்றல் அமைந்துள்ளது.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

டெஸ்லாவின் தானியங்கி வசதியை சில டெஸ்லா மின்சார கார் உரிமையாளர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த காரணத்திற்காகவே இந்த தானியங்கி வசதியைப் பயன்படுத்த அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காரின் சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியர் கைது... ஏற்கனவே சொல்லியும் கேக்கல!!

அதேசமயம், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு பயன்படுத்தலாம் என அமெரிக்க நிறுவனமான டெஸ்லா கூறுகின்றது. ஆகையால், முக்கியமான சில கட்டுப்பாடுகளைக் கையில் வைத்த வண்ணமே இந்த தானியங்கி வசதியை இயக்க வேண்டும். இல்லையெனில் இப்படிதான் வீணாக காவல்துறையின் கெடுபிடியில் சிக்க வேண்டியிருக்கும்.

Source: Cartoq

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian-Origin YoungMan Arrested For Using Tesla Auto-Pilot Mode. Read In Tamil.
Story first published: Friday, May 14, 2021, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X