இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

எந்தவொரு பேட்டரி தொகுப்புகளையும் கொண்டில்லாத ஹைப்ரீட் டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ராக்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

இந்தியாவின் முதல் முழு ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டரான இதனை நொய்டாவை சேர்ந்த ப்ராக்ஸெக்டோ என்ஜினியரிங் சர்வீஸ் & எச்ஏவி டிராக்டர்கள் என்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

இந்த டிராக்டரின் முக்கிய அம்சமே இதில் பேட்டரி தொகுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது தான். கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான துறையில்-முதல் தொழிற்நுட்ப வசதிகளினால், இந்தியாவின் மிகவும் புதுமையான டிராக்டர் என்ற பெயரை இது பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

2019 நவம்பரில் ஜெர்மனியில் நடந்த அக்ரிடெக்னிகா என்ற உலகின் பெரிய வேளாண் துறைக்கு சம்மந்தப்பட்ட வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட எச்ஏவி டிராக்டர்கள் ஏற்கனவே உலகம் முழுவதிலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் பேட்டரி இல்லா ஹைப்ரீட் டிராக்டர் என்ற பெயரில் பிரபலமாகிவிட்டன.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

அதனை தொடர்ந்து தற்போது இந்த எச்ஏவி எஸ்1 வரிசை டிராக்டர்கள் இந்திய விவசாயிகளுக்காக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பான வடிவத்திலான கேபின் உடன் ஆரம்ப நிலை எச்ஏவி எஸ்1 50எச்பி வேரியண்ட்டின் விலை ரூ.9,49,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

அதுவே ஏசி கேபினை கொண்ட டாப் வேரியண்ட்டான எச்ஏவி எஸ்1+ 50எச்பி-இன் விலை சற்று அதிகமாக ரூ.11,99,000 என கொண்டுவரப்பட்டுள்ளது. இவை இரண்டையும் http://www.hybridagrivehicle.com/ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

இதற்கான முன்பதிவு தொகை ரூ.10,000 ஆகும். பேட்டரி தொகுப்புகள் இல்லாததினால் வெவ்வேறான, பல்வேறுப்பட்ட எரிபொருள்களில் இந்த எச்ஏவி ஹைப்ரீட் டிராக்டர்கள் இயங்கும். அதேநேரம் இவற்றை முழுவதும் எலக்ட்ரிக் வாகனமாகவும் அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

ஏற்கனவே கூறியதுதான், இந்திய சந்தையில் முதல்முறையாக 20க்கும் அதிகமான துறையில்-முதல் தொழிற்நுட்பங்கள் உடன் இந்த ஹைப்ரீட் டிராக்டர்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வகையில் அனைத்து-சக்கர எலக்ட்ரிக் ட்ரைவ் கொண்ட இந்தியாவிலேயே முதல் டிராக்டராக இவை விளங்கவுள்ளன.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

இந்த டிராக்டரில் க்ளட்ச் இல்லை, கியர் கிடையாது. எளிமையான பயன்பாட்டிற்கு முன்னோக்கி-நடுநிலை-பின்னோக்கி என்ற மூன்று ட்ரைவிங் மோட்கள் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளன. சக்கரங்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டுள்ள சுதந்திரமான சஸ்பென்ஷன் அமைப்பு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் உள்ளது.

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரீட் டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம்!! பேட்டரிகள் எதுவும் இல்லை...

எச்ஏவி எஸ்1 50எச்பி டிராக்டர்கள் உடன் ரூ.8.49 லட்சத்தில் எஸ்1 45எச்பி டிராக்டரையும், எஸ்1 55எச்பி டிராக்டரையும் அறிமுகப்படுத்துவதாகவும், இவற்றை பற்றிய விபரங்களை தங்களது இணையத்தள பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் எச்ஏவி டிராக்டர்கள் நிறுவனத்தின் நிறுவனர் அன்கிட் தியாகி தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #டிராக்டர் #tractor
English summary
India's First Fully Automatic Hybrid Tractor Launched with No Battery Packs - HAV Tractors Series S1.
Story first published: Friday, May 7, 2021, 23:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X