ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்தியாவிலேயே முதன்முறையாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் ஒன்று மார்ல்போரோ டிசைனில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஆற்றல்மிக்க ஜிடி வெர்சனும் விற்பனையில் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பு என்பதால் போலோ காரின் செயல்படுதிறனில் எந்த குறையும் இருப்பதில்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

ஆனால் கடந்த பத்து வருடங்களாக போலோ ஹேட்ச்பேக் காரின் தோற்றம் அப்படியே தான் உள்ளது. இதனால் போலோ காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் சிலர் காரை தங்களது விருப்பதிற்கு ஏற்றாற்போல் மாடிஃபை செய்ததை சில முறை பார்த்துள்ளோம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்த வகையில் தற்போது இந்தியாவின் முதல் காராக மார்ல்போரோ வ்ராப்-ஐ போலோ கார் ஒன்று பெற்றுள்ளது. தி லாஸ்ட் வாயேஜர் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோவில் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

ஆனால் இந்த கஸ்டமைஸ்ட் காரின் மிக முக்கியமான சிறப்பம்சமே அதன் மார்ல்போரோ பெயிண்ட்தான். வெளிநாடுகளில் இவ்வாறு பெயிண்ட் செய்யப்பட்ட கார்களை பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவில் இதுதான் முதல்முறையாகும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் ஏற்கனவே சிவப்பு நிறத்தில் இருந்ததால் காரின் உரிமையாளர் மார்ல்போரோ லோகோ உடன் வெள்ளை நிறத்தை மட்டும் கொடுத்துள்ளார். வ்ராப்-ஐ கொடுப்பதற்கு முன்னதாக ஏற்கனவே கூறியதுபோல் காரில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

முன்பக்கத்தில் வழக்கமான பம்பருக்கு பதிலாக சற்று வித்தியாசமான ஆர் லைன் பம்பர் அகலமான காற்று ஏற்பான் உடன் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் எல்இடி டிஆர்எல்களுடன் இரட்டை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களை இந்த போலோ ஜிடி கார் புதியதாக பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

அப்படியே பக்கவாட்டிற்கு சென்றால், வழக்கமான போலோ ஜிடி காரை காட்டிலும் இந்த கஸ்டமைஸ்ட் கார் சற்று தாழ்வாக உள்ளது. இதற்காக ஈபாச் நிறுவனத்தின் தாழ்வான சுருள்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

கார் தாழ்வாக கொண்டுவரப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் தடிமன் குறைவான டயர்கள் உடன் பொருத்தப்பட்டுள்ளன. காரின் மேற்கூரை முற்றிலும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

பின்பக்கத்தில் தற்போதைய போலோ டிஎஸ்ஐ காரில் வழங்கப்படும் பம்பர் மற்றும் சந்தைக்கு பிறகான எல்இடி யூனிட்களுடன் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிற ஸ்பாய்லரை மேற்கூரையிலும் பார்க்க முடிகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

காரை சுற்றிலும் க்ரோம் பாகங்கள் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் இந்த போலோ ஜிடி காரில் கோட்6 நிறுவனத்தின் பிஎம்சி வடிக்கட்டி உடன் நிலை 2 ரீமேப் மற்றும் கஸ்டம் கார்பன் இரட்டை எக்ஸாஸ்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இவற்றின் உதவியினால் இந்த காரை அதிகப்பட்சமாக 135- 140 பிஎச்பி பவரில் இயக்க முடியும். உட்புறம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இருக்கைகளில் சிவப்பு நிற தையல்களையும் பார்க்க முடிகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரை நிச்சயம் இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!! இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்த கஸ்டமைஸ்ட் காரின் கேபினில் சந்தைக்கு பிறகான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த மாடிஃபிகேஷன் பணிக்கும் கிட்டத்தட்ட ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையில் செலவானதாக மேலே உள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
India’s first Marlboro wrapped custom Volkswagen Polo GT
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X