டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

இந்தூர் நகரில் 400 புதிய சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில், வரும் மார்ச் மாதம் புதிதாக 400 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த 400 புதிய சிஎன்ஜி பேருந்துகளை இயக்குவதற்கு வசதியாக விஜய் நகர் சதுக்கத்தில், புதிதாக பஸ் டெப்போ ஒன்றை கட்டமைப்பதற்கு, அடல் இந்தூர் நகர போக்குவரத்து சேவை நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

விஜய் நகர் சதுக்கத்தில் ஐஎம்சி மண்டல அலுவலகத்திற்கு பின்னால், மூன்று ஏக்கர் நிலத்தில் பஸ் டெப்போ அமைப்பதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே டெண்டர் கோரப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்த பணிகள் மேற்கண்டு முன்னேற்றம் அடையவில்லை. எனினும் 400 சிஎன்ஜி பேருந்துகளை வாங்குவதற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

எனவே பஸ் டெப்போ அமைப்பதற்காக சில மாற்றங்களுடன் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து அடல் இந்தூர் நகர போக்குவரத்து சேவை நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''டெண்டர் வழங்கப்பட்ட பின், 11 கோடி ரூபாய் செலவில், சுமார் 6 மாத காலத்திற்குள் பஸ் டெப்போ பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

இங்கே பேருந்துகளை பராமரிப்பது மற்றும் நிறுத்தி வைப்பதற்கான அனைத்து வசதிகளும் இருக்கும்'' என்றனர். 400 புதிய சிஎன்ஜி பேருந்துகளும் வரும் மார்ச் மாத மத்தியில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேருந்துகளின் வருகைக்கு பின், குறைந்தபட்சம் 25 புதிய வழித்தடங்களில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

வரும் மார்ச் மாதம் இந்தூர் 400 சிஎன்ஜி பேருந்துகளை பெறவுள்ள நிலையில், இதுதவிர ஏசி வசதியுடன் 150 மற்றும் ஏசி வசதியில்லாமல் 100 சிஎன்ஜி பேருந்துகளை வாங்குவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது. இந்த பேருந்துகளின் வருகைக்கு பின், புதிய வழித்தடங்கள் மற்றும் அவற்றை நிறுத்தி வைப்பதற்காக மற்றொரு பஸ் டெப்போவை எங்கே அமைப்பது? என்பது போன்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

இந்தியாவில் தற்போது சிஎன்ஜி வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. தனி நபர்கள் மட்டுமல்லாது முக்கிய நகரங்கள் மற்றும் மாநிலங்களின் போக்குவரத்து கழகங்களும் சிஎன்ஜி பேருந்துகளை அதிகளவில் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

இதற்கு டெல்லி ஒரு உதாரணம். இந்தூர் மட்டுமல்லாது, டெல்லி போக்குவரத்து கழகமும் சிஎன்ஜி பேருந்துகளை அதிகமான எண்ணிக்கையில் இயக்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. சிஎன்ஜி பேருந்துகளுடன், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் டெல்லி மாநில அரசு ஊக்குவித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

டெல்லியை போல் சூப்பரான நடவடிக்கை... வரும் மார்ச் மாதம் 400 சிஎன்ஜி பஸ்கள் ஓடும்... எந்த ஊரில் தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இந்தியாவிற்கே டெல்லி ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையல்ல. காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், டெல்லி மிக வேகமாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வருகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Indore To Get 400 New CNG Buses - Here Are All The Details. Read in Tamil
Story first published: Monday, February 22, 2021, 21:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X