Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'தூக்கியெறிய மனசு வரல'... 22 ஆண்டுகள் பழைய காரை தூர் வாரும் எந்திரமாக மாற்றிய இஸ்ரோ இஞ்ஜினியர்... அட்டகாசம்!
பழைய காரை தூக்கிய மனமில்லாத காரணத்தினால் இஸ்ரோ பொறியியாளர் ஒருவர் அக்காரை தூர் வாரும் எந்திரமாக மாற்றியிருக்கின்றார். இதற்கான செலவு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பென் ஜேகப் எனும் இஸ்ரோ பொறியாளரே தனது 22 ஆண்டுகள் பழைய காரை தூர் வாரும் எந்திரமாக மாற்றியமைத்திருக்கின்றார். இதற்காக டேவூ மோட்ட்ராஸ் நிறுவனத்தின் மாடிஸ் எனும் மாடல் காரை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். டேவூ மோட்டார்ஸ், இந்த பெயர் நீங்கள் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்ககலாம்.

Source: The Hindu
ஆனால் இந்நிறுவனம் 1980 மற்றும் 1990களில் இந்தியாவில் துடிப்புடன் செயல்பட்ட நிறுவனம் ஆகும். பல்வேறு காரணங்களுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னரே இந்நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இருப்பினும், டேவூ மோட்டார் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளை தற்போதும் இந்தியாவில் காண முடிகின்றது.

அத்தகையிலான ஓர் டேவூ காரையே இஸ்ரோவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தூக்கியெறிய மனமில்லாமல் தூர் வாரும் எந்திரமாக மாற்றியிருக்கின்றார். மேடிஸ் ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இதில் தூர் வாரும் எந்திரமா, என்பதே அநேகரிடத்தில் மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள சூழட்டுகோட்டா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பென் ஜேகப். இங்குள்ள தனது சொந்த நிலத்தைச் சீரமைப்பதற்காகவே இந்த வாகனத்தை அவர் மாற்றியமைத்திருப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, இந்த வாகனத்தை ஸ்கிராப் செய்ய விருப்பமில்லாமலேயே இந்த முடிவை எடுத்து அவர் மாற்றியமைத்திருக்கின்றார்.

இந்த வாகனத்தின் மூலம் 14 அடி நீளமுள்ள இடத்தைக் கூட தூர் வார முடியும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து ஆறு டன் சக்தியுடன் இயங்கும் திறனை இந்த வாகனத்திற்கு அவர் கொடுத்திருக்கின்றார். ஆகையால், கரடு முரடான சாலையைக் கூட அசால்டாக இந்த வாகனத்தைக் கொண்டு கையாள முடியும் என்பது தெரிகின்றது.

அதேசமயம், 500 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை இந்த எந்திரத்தைக் கொண்டு அசால்டாக தூக்க முடியும் எனவும் இஸ்ரோ பொறியாளர் பென் ஜேக்கப் கூறியிருக்கின்றார். இத்தகைய திறன் கொண்ட வாகனமாக டேவூ மேடிஸ் காரை மாற்றுவதற்கு ரூ. 70 ஆயிரம் வரை மட்டுமே அவர் செலவு செய்திருக்கின்றார். இதுவே, ஓர் தூர் வாரும் எந்திரத்தை புதிதாக வாங்க வேண்டுமானால் ரூ. 20 லட்சம் வரையில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், தனது பொறியியர் திறன் மூலம் மிக மலிவான விலையில் தனக்கான தூர் வாரும் எந்திரத்தை கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ பொறியாளர் பென் ஜேகப் வடிவமைத்திருக்கின்றார். டேவூ மேடிஸ் காரை வேறொருவரிடத்தில் இருந்தே பென் ஜேகப் பெற்றிருக்கின்றார். இது 1998ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட காராகும்.

22 ஆண்டுகளை இந்த கார் தொட்டுவிட்டதால் ஸ்கிராப் செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கின்றது. ஆனால், அவ்வாறு செய்ய மனமில்லாத காரணத்தினாலேயே பென் ஜேகப் காரை தூர் வாரும் எந்திரமாக மாற்ற திட்டமிட்டார். இதனை உருவாக்கியும் இருக்கின்றார். இதற்கான பெரும்பாலான உடற்கூறுகளை ஒர்க்ஷாப்பிடம் கேட்டு பெற்றே பயன்படுத்தியிருக்கின்றார்.