காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான இசுஸு மோட்டார்ஸ் அதன் பயணிகள் வாகனங்கள் அனைத்தின் விற்பனையையும் நிறுத்தி கொள்ளவுள்ளதாக கடந்த ஆண்டில் அறிவித்திருந்தது.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

இதற்கு காரணம், கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதி ஆகும். பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக வாகனங்களை அப்கிரேட் செய்ய சில காலங்களை இந்த நிறுவனம் எடுத்து கொண்டது.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

இதனால் இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து பிஎஸ்6 வாகனங்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் தற்போது டி-மேக்ஸ் ஹை-லேண்டர் இந்தியாவில் வருகிற மே 10ஆம் தேதி, மதியம் 12 மணியளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

இதுதொடர்பான டீசர் படம் இசுஸுவின் இந்திய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. புதிய இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டர் காரில் பழைய 2.5 லிட்டர் டீசல் என்ஜினிற்கு மாற்றாக பிஎஸ்6 தரத்திற்கு இணைக்கமான 1.9 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த புதிய டீசல் என்ஜின் உடன் ஒரே ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

2021 டி-மேக்ஸ் ஹை-லேண்டர் இந்திய டீலர்ஷிப் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் கடந்த மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன. இசுஸு டி-மேக்ஸ் வாகனத்தின் மலிவான ஆரம்ப நிலை வேரியண்ட் தான் ஹை-லேண்டர் என்பதை இந்த இடத்தில் உங்களுக்கு நினைவுப்படுத்துகின்றோம்.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், இரும்பு சக்கரங்கள் மற்றும் கருப்பு நிற பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் என டி-மேக்ஸ் ரேஞ்ச் & ஹை-லேண்டர் வாகனங்களில் வெளிப்புறம் குறிப்பிடத்தக்க அளவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

காத்திருந்தது போதும்... இசுஸு டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!!

டி-மேக்ஸ் வி-க்ராஸ் உடன் ஒப்பிடுகையில் ஹை-லேண்டர் வேரியண்ட் அலாய் சக்கரங்கள், மேற்கூரை தண்டவாளங்கள், ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றுடன் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகளில் க்ரோம் உள்ளீடுகளை இழந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu D-Max Hi-Lander to be launched in India on 10 May, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X