கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தின் புதிய டீசர் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்கிரேட் செய்யப்பட்ட பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தின் அறிமுகம் இந்த மே மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

இதற்கிடையில் தான் தற்போது இந்த பிஎஸ்6 வாகனத்தின் டீசர் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காரின் உறுதியான அறிமுக தேதி குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

‘Coming Soon' என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த பிஎஸ்6 இசுஸு வாகனம் ஏற்கனவே சில இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைந்துவிட்டது.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய அப்கிரேட் செய்யப்பட்ட டி-மேக்ஸ் வி-க்ராஸில் 2.5 லிட்டர் டீசல் என்ஜினிற்கு மாற்றாக 1.9 லிட்டர், 4-சிலிண்டர், டீசல் என்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படவுள்ளது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்பட போவதில்லை.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

இந்த புதிய டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசட் 2-சக்கர ட்ரைவ் ஆட்டோமேட்டிக் & இசட் பிரெஸ்டிஜ் 4-சக்கர ட்ரைவ் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான வேரியண்ட்களில் 2021 டி-மேக்ஸ் வி-க்ராஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

இதில் இந்த பிஎஸ்6 வாகனத்தின் டாப் வேரியண்ட் 4x4 திறனை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் பை-எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை பெற்றுவரும் இந்த பிஎஸ்6 வாகனத்தின் வெளிப்புறத்தில் எல்இடி டிஆர்எல்கள், க்ரோம் பெசெல் உடன் முன்பக்க ஃபாக் விளக்குகள், மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் பக்கவாட்டு படிக்கட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

இதன் அலாய் சக்கரங்கள் 18 இன்ச்சில் பொருத்தப்படவுள்ளன. உட்புறத்தில் முதலில் நமது கவனத்தை ஈர்க்கும் விதத்தில் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

கூடுதல் வலிமைமிக்கதாக பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்!! அறிமுகம் மிக விரைவில்...

இதனுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், 6 விதமான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், 6 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், இஎஸ்சி, எச்டிசி, எச்.எஸ்.ஏ, சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் வசதி, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
BS6 Isuzu D-Max V-Cross teased yet again ahead of launch.
Story first published: Tuesday, May 4, 2021, 21:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X