எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளது. இந்த ஜாகுவார் காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

அதிக செயல்திறன்மிக்க எஸ்யூவி காராக களமிறக்கப்படவுள்ள இந்த ஜாகுவார் எஃப்-பேஸ் கார் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் அப்டேட்களை பெற்றுள்ளது.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

அதேநேரம் சில மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களையும் எஃப்-பேஸ் எஸ்விஆர் கார் ஏற்றுவரவுள்ளது. இந்த ஜாகுவார் காரில் தயாரிப்பு நிறுவனம் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பொருத்தவுள்ளது.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

அதிகப்பட்சமாக 543 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட உள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை இந்த ஜாகுவார் கார் வெறும் 4.0 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

இந்த காரில் கம்ஃபர்ட், டைனாமிக் என இரு விதமான டிரைவிங் மோட்களில் ஏதேனும் ஒன்றை ஓட்டுனர் தேர்வு செய்ய முடியும். ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஸ்பெஷல் வாகன (எஸ்வி) மோட்டார்ஸ்போர்ட்டின் அனுபவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எஃப்-பேஸ் எஸ்விஆர் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்க க்ரில்லில் ஜாகுவார் லோகோ உடன் எஸ்விஆர் முத்திரையும் வழங்கப்படுகிறது.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

க்ரில்லின் இரு பக்கத்திலும் ஜாகுவாரின் ‘இரட்டை J' டிஆர்எல்களுடன் முழு-எல்இடி குவாட் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஹெட்லைட்களுடன் தேர்வாக பிக்ஸெல் எல்இடி தொழிற்நுட்பத்தையும் பெற முடியும் என்கிறது ஜாகுவார்.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

முன்பக்க பம்பரின் வடிவம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. என்ஜினை கூடுதலாக குளிரூட்ட பெரிய காற்று ஏற்பான் கூடுதல் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் உட்புறத்தின் தோற்றமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

உட்புறத்தில் 11.4 இன்ச்சில் வளைவான கண்ணாடி எச்டி தொடுத்திரை வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக வசீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புற கேபினில் கூடுதல் தேர்வாக காற்று அயனியாக்கி மற்றும் வயர் இல்லா சார்ஜர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

ஜாகுவார் லேண்ட் ரோவரின் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக் வாகன கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் கார் லேட்டஸ்ட் பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மெண்ட் தொழிற்நுட்பம், சாஃப்வேர்-ஓவர்-தி-ஏர் திறன் மற்றும் முப்பரிமாண கேமிரா முதலியவற்றை கொண்டுள்ளது.

எஃப்-பேஸ் எஸ்விஆர் காருக்கான முன்பதிவை துவங்கியது ஜாகுவார்!! விரைவில் அறிமுகம்

எக்ஸ்.இ, எகஸ்.எஃப், எஃப்-பேஸ், ஐ-பேஸ் மற்றும் எஃப்-டைப் உள்ளிட்டவை அடங்கிய ஜாகுவாரின் இந்திய லைன்அப்பை விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் எஃப்-பேஸ் எஸ்விஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் மேலும் பலப்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover India, today announced that the bookings have been opened for the new Jaguar F-PACE SVR in India. Sitting at the pinnacle of the Jaguar performance SUV range, the new F-PACE SVR is faster than ever and features motorsport-inspired exterior design, a luxurious interior and the latest connected technologies.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X