இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

இதுவரையில் இல்லாத லக்சரி லேண்ட் ரோவர் எஸ்யூவி காராக 2022 ரேஞ்ச் ரோவர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரேஞ்ச் ரோவர் காரினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐந்தாம் தலைமுறை ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் புதிய தோற்றத்தில் புதிய என்ஜின் தேர்வுகளுடன், புதிய தொழிற்நுட்பங்களை பெற்று வந்துள்ளது. புதிய எம்எல்ஏ ஃப்ளெக்ஸ் ப்ளாட்ஃபாரத்தில் 2022 ரேஞ்ச் ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

2022 ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் வெர்சனில் இன்னும் இரண்டு வருடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. JLR நிறுவனம் ரேஞ்ச் ரோவரின் இந்த புதிய தலைமுறையையும் வழக்கம்போல் இரு வெவ்வேறு விதமான வீல்பேஸ் மாடல்களில், 5 என்ஜின் தேர்வுகள் மற்றும் 4-இல் இருந்து 9 பேர் வரையிலான இருக்கை தேர்வுகளுடன் கொண்டுவந்துள்ளது.

இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

2022 ரேஞ்ச் ரோவரின் வெளியீட்டின் போது பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவரின் சிஇஒ தியரி போலூர், புதிய ரேஞ்ச் ரோவர் ஆனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான சொகுசு வாகனங்களை உருவாக்குவதற்கான எங்கள் பார்வையின் சிறந்த வெளிப்பாடாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேஞ்ச் ரோவரின் அடையாளமாக இருக்கும் தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளின் கதையில் இது அடுத்த அத்தியாயத்தை எழுதுகிறது என்றார்.

இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

2022 ரேஞ்ச் ரோவர் 5 மீட்டர்களுக்கும் அதிகமான நீளமுடையது. அதுவே இதன் நீண்ட வீல்பேஸ் வெர்சனின் நீளம் 5.25 மீட்டர்களாகும். அகலம் 2.20 மீட்டர்கள் & உயரம் 1.87 மீட்டர்கள். இதன் வீல்பேஸ் கிட்டத்தட்ட 3 மீட்டர்கள் நீளத்தில் உள்ளது. அதேநேரம் நீண்ட வீல்பேஸ் வெர்சனில் 3.19 மீட்டர்களாக உள்ளன. எஸ்.இ, எச்.எஸ்.இ, ஆட்டோபயோகிராஃபி என்ற மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் புதிய ரேஞ்ச் ரோவர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

தோற்றத்தில் ரேஞ்ச் ரோவர் அதன் இந்த ஐந்தாம் தலைமுறையில் சில முக்கியமான மாற்றங்களை பெற்றுள்ளது. இருப்பினும் அதே கம்பீரமான பெட்டகம் வடிவிலான டிசைன் அப்படியே தொடரப்பட்டுள்ளது. 2022 ரேஞ்ச் ரோவரின் முன்பக்கம் ஆனது புதிய க்ரில் கிராஃபிக்ஸ் மற்றும் டிஆர்எல்களுடன் டிஜிட்டல் எல்இடி ஹெட்லேம்ப் டிசைனை கொண்டுள்ளது.

இருப்பதிலேயே லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி வாகனம், 2022 ரேஞ்ச் ரோவர்!! உலகளவில் வெளியீடு

இதன் கதவுகள் ஒருங்கிணைந்த ஆபத்தை கண்டறியும் நுட்பம் மற்றும் ஆபத்தை உணர்ந்து தாமாக மூடிக்கொள்ளும் கண்ணாடிகளுடன் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் கதவுகள் எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடியவை. இவற்றை டேஸ்போர்டில் வழங்கப்படும் பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் மூலமாகவும் கண்ட்ரோல் செய்யலாமாம்.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி, 2022 ரேஞ்ச் ரோவர்

வெளிப்புறத்திற்கு இணையாக காரின் உட்புற கேபினும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்றுள்ளது. 2022 ரேஞ்ச் ரோவரின் உட்புற டேஸ்போர்டில் 13.7 இன்ச்சில் டிஜிட்டல் ஓட்டுனர் திரை மற்றும் 13.1 இன்ச் வளைவான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில், பிவி ப்ரோ மென்பொருளுடன் வழங்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வயர்லெஸ் இணைப்பு வசதி உடன் உள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி, 2022 ரேஞ்ச் ரோவர்

இவற்றுடன் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் முழு டிஜிட்டல் க்ளைமேட் கண்ட்ரோல்களும் புதியவை ஆகும். JLR-இன் இந்த லக்சரி எஸ்யூவி வாகனத்தில் பின் இருக்கை பயணிகளுக்கும் 11.4 இன்ச்சில் தொடுத்திரை முன் இருக்கைகளுக்கு பின்னால் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து வெளிவரும் சத்தத்தினை வெளிப்படுத்துவதற்கு 1,600 வாட்ஸ் 35 ஸ்பீக்கர் மெரிடியன் சிக்னெச்சர் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் இந்த 2022 வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி, 2022 ரேஞ்ச் ரோவர்

இவை எல்லாவற்றையும் விட கேபினில் முக்கியமான மாற்றமாக பொருட்களை வைக்கும் காரின் பின்பக்க பூட் பகுதி முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குஷின், பேக் ரெஸ்ட் மற்றும் ஸ்பீக்கர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பகுதியினை தேவை என்றால் கூடாரமாகவும் பயன்படுத்தலாம் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி, 2022 ரேஞ்ச் ரோவர்

புதிய ரேஞ்ச் ரோவர் மொத்தம் 8 விதமான சிலிண்டர் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பி440இ மற்றும் பி510இ என்ற இரு ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்களும், பி360, பி400 & பி530 என்ற மூன்று பெட்ரோல் என்ஜின் தேர்வுகளும், டி250, டி300 & டி350 என்ற மூன்று டீசல் என்ஜின் தேர்வுகளும் அடங்குகின்றன.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் விலைமிக்க எஸ்யூவி, 2022 ரேஞ்ச் ரோவர்

இவை அனைத்துடனும் 8-ஸ்பீடு இசட்.எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், பெட்ரோல் (அ) டீசல் என்ஜின் உடன் எடை குறைவான 48 வோல்ட் ஹைப்ரீட் அமைப்பும் இணைக்கப்படுகிறது. பி440இ & பி510இ என்ற 2022 ரேஞ்ச் ரோவரின் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்களில் 6-சிலிண்டர் இன்கேனியம் பெட்ரோல் என்ஜின் உடன் 38.2kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
2022 Land Rover Range Rover Officialy Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X