பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஜாகுவார் (Jaguar) , அதன் 2021 எக்ஸ்எஃப் (2021 XF) சொகுசு செடான் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரின் விலை மற்றும் புதுப்பித்தலின் வாயிலாக என்னென்ன அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் (Jaguar), அதன் புதுப்பிக்கப்பட்ட 2021 எக்ஸ்எஃப் (2021 Jaguar XF) லக்சூரி செடான் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்பதால் புதிய வசதிகள் மற்றும் அம்சங்கள் சில இதில் இடம் பெற்றிருக்கின்றன.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

புதிய 2021 எக்ஸ்எஃப் சொகுசு செடான் இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆர்-டைனமிக் எஸ் எனும் பெயரிலேயே இரு ட்ரிம்களும் அழைக்கப்படும். இதிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 71.60 லட்சம் ஆகும். உயர்நிலை வேரியண்டிற்கு ரூ. 76 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

2.0 பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு கொண்ட எக்ஸ்எஃப் அதிகபட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது வெறும் 6.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

இதன் டீசல் எஞ்ஜின் பெட்ரோல் வெர்ஷனைக் காட்டிலும் திறன் வெளிப்பாடு கொண்டதாக காட்சியளிக்கின்றது. முன்பு பிஎஸ்6 தர உமிழ்வு கட்டுப்பாடு காரணமாக விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 201 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடியது.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

இது வெறும் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட 7.6 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 235 கிமீ வேகம் ஆகும். இத்துடன் லேசான ஹைபிரிட் வசதியை டீசல் எஞ்ஜினில் ஜாகுவார் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு மோட்டார்களிலும் 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

புதிய 2021 ஜாகுவார் எக்ஸ்எஃப் காருக்கு கூடுதல் ஸ்போர்டி தோற்றம் வழங்க வேண்டும் என்பதற்காக லேசான மாற்றங்கள் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று பெரிய தோற்றம் மற்றும் குரோம் லைன்கள் கொண்ட க்ரில், புதிய எல்இடி ஹெட்லேம்ப், ஜே வடிவ எல்இடி டிஆர்எல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

இதேபோல் காரின் பின் பக்க மின் விளக்கிலும் நிறுவனம் கை வைத்திருக்கின்றது. புதிய கிராஃபிக் டிசைன் அந்த எல்இடி மின் விளக்கிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, மிக சிறப்பாக காற்று உள்நுழையும் துவாரங்கள் பெரியதாக பம்பரில் வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 11.4 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (பிவி ப்ரோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன்), புதிய ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒயர்லெஸ் சார்ஜர், காற்று வடிகட்டி, ஆம்பிசியன்ட் மின் விளக்கு, வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை ஆகியவை புதிய 2021 ஜாகுவார் எக்ஸ்எஃப்-இல் வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் இ-கிளாஸ், ஆடி ஏ6 மற்றும் புதுமுக அறிமுகமான வால்வோ எஸ்90 ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியாக நாட்டில் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

டாடா மோட்டார்சுக்கு சொந்தமான ஜாகுவார் நிறுவனம், இந்தியாவில் தொடர்ச்சியாக புதுமுக கார்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. வரும் பண்டிகைக் காலத்தை அலங்கரிக்கும் பொருட்டு நிறுவனம் புதுமுக தயாரிப்புகளை நாட்டில் களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், எஃப்-பேஸ் எஸ்விஆர் (F-Pace SVR SUV) காரை நாட்டில் அறிமுகம் செய்தது. இத்துடன், கடந்த 4ம் தேதி இக்காருக்கான டெலிவரி பணிகளையும் தொடங்கியது.

பெட்ரோல், டீசல் இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்... மிக மிக அதிக விலையில் Jaguar XF அறிமுகம்!

புக்கிங் பணிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்ட நிலையில் அக்டோபர் 4ம் தேதியில் இருந்தே எஃப்-பேஸ் எஸ்விஆர் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கின. இக்காருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.51 கோடி என்ற விலையை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இன்னும் சில லட்சங்கள் உடன் இது விற்பனைக்குக் கிடைக்கும். ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி காரில் அதிக திறன் வெளிப்பாட்டிற்காக 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 543 எச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar launched 2021 xf luxury sedan in india at rs 71 60 lakh
Story first published: Tuesday, October 26, 2021, 14:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X