Just In
- 16 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இந்த ஜாகுவார் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
பிரத்யேகமான ஜாகுவார் எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் மாடல், ஜாகுவார் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உண்டான அழகு, காலம் கடந்த தோற்றம் மற்றும் கூடுதல் தொழிற்நுட்ப பாகங்கள் என்ற மூன்று அம்சங்களுக்கும் உறுதியளிக்கிறது.
இத்தகைய ஜாகுவார் காருக்கு தான் தற்போது முன்பதிவுகள் நம் நாட்டில் துவங்கப்பட்டுள்ளன. வழக்கமான ஜாகுவார் எஃப்-டைப் காரில் இருந்து வேறுப்படுத்தி தெரிவதற்காக, ஆர்-டைனாமிக் கருப்பு என்கிற பெயரில் புதிய ஆக்ஸஸரீகள் தொகுப்புகளுடன் இந்த எஃப்-டைப் மாடலை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
பெயரை பார்த்தவுடனே இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இது எத்தகைய ஆக்ஸஸரீகளாக இருக்கும் என்று, ஆம் கருப்பு நிறத்தில் புத்துணர்ச்சியாக்கக்கூடிய காஸ்மெட்டிக் மாற்றங்களும், ஹைலைட்களும் உட்புற கேபின் உள்பட எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன.
சண்டோரினி ப்ளாக், ஈகர் க்ரே மற்றும் ஃபிரினெஸ் சிவப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் புதிய எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் மாடலில் 5-ஸ்போக் 20-இன்ச் அலாய் சக்கரங்கள் காரின் பெயிண்ட் நிறத்திற்கு ஏற்ப பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
உட்புற கேபினில் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸர் லெதர் செயல்திறன் இருக்கைகளை பிரத்யேகமான தையல் தேர்வுடன் எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் கார் பெற்றுள்ளது. இந்த பிரத்யேக தையல் தேர்வுகளில், இளம் சிப்பி நிற தையல்களுடன் கருப்பு நிற இருக்கைகள் மற்றும் சிவப்பு நிற தையல்களுடன் பழுப்பு நிற இருக்கைகள் என்பவை அடங்குகின்றன.
இந்த இரு தேர்வில் தனது எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காருக்கு எது ஏற்றது என்பதை பார்த்து வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். எங்களை கேட்டால், மோனோகிராம் பேட்டர்னில் கதவுகளில் அலங்கரிப்பு வழங்கப்படுவதால், கருப்பு நிற இருக்கை தேர்வு காரின் உட்புற கேபினை கூடுதல் ப்ரீமியம் தோற்றத்தில் காட்டும்.
இயக்க ஆற்றலுக்கு புதிய ஜாகுவார் எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காரில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 444 பிஎச்பி மற்றும் 580 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு 'விரைவுமாற்றி' டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பு என்ஜினின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும். மற்றப்படி இந்த புதிய மாடலின் விலைகளை தற்போதைக்கு ஜாகுவார் நிறுவனம் வெளியிடவில்லை. வழக்கமான ஜாகுவார் எஃப்-டைப் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.97.73 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.