ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இந்த ஜாகுவார் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

பிரத்யேகமான ஜாகுவார் எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் மாடல், ஜாகுவார் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உண்டான அழகு, காலம் கடந்த தோற்றம் மற்றும் கூடுதல் தொழிற்நுட்ப பாகங்கள் என்ற மூன்று அம்சங்களுக்கும் உறுதியளிக்கிறது.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

இத்தகைய ஜாகுவார் காருக்கு தான் தற்போது முன்பதிவுகள் நம் நாட்டில் துவங்கப்பட்டுள்ளன. வழக்கமான ஜாகுவார் எஃப்-டைப் காரில் இருந்து வேறுப்படுத்தி தெரிவதற்காக, ஆர்-டைனாமிக் கருப்பு என்கிற பெயரில் புதிய ஆக்ஸஸரீகள் தொகுப்புகளுடன் இந்த எஃப்-டைப் மாடலை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

பெயரை பார்த்தவுடனே இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இது எத்தகைய ஆக்ஸஸரீகளாக இருக்கும் என்று, ஆம் கருப்பு நிறத்தில் புத்துணர்ச்சியாக்கக்கூடிய காஸ்மெட்டிக் மாற்றங்களும், ஹைலைட்களும் உட்புற கேபின் உள்பட எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

சண்டோரினி ப்ளாக், ஈகர் க்ரே மற்றும் ஃபிரினெஸ் சிவப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் புதிய எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் மாடலில் 5-ஸ்போக் 20-இன்ச் அலாய் சக்கரங்கள் காரின் பெயிண்ட் நிறத்திற்கு ஏற்ப பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

உட்புற கேபினில் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸர் லெதர் செயல்திறன் இருக்கைகளை பிரத்யேகமான தையல் தேர்வுடன் எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் கார் பெற்றுள்ளது. இந்த பிரத்யேக தையல் தேர்வுகளில், இளம் சிப்பி நிற தையல்களுடன் கருப்பு நிற இருக்கைகள் மற்றும் சிவப்பு நிற தையல்களுடன் பழுப்பு நிற இருக்கைகள் என்பவை அடங்குகின்றன.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

இந்த இரு தேர்வில் தனது எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காருக்கு எது ஏற்றது என்பதை பார்த்து வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். எங்களை கேட்டால், மோனோகிராம் பேட்டர்னில் கதவுகளில் அலங்கரிப்பு வழங்கப்படுவதால், கருப்பு நிற இருக்கை தேர்வு காரின் உட்புற கேபினை கூடுதல் ப்ரீமியம் தோற்றத்தில் காட்டும்.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

இயக்க ஆற்றலுக்கு புதிய ஜாகுவார் எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக் காரில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 444 பிஎச்பி மற்றும் 580 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ‘விரைவுமாற்றி' டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் கார், எஃப்-டைப் ஆர்-டைனாமிக் ப்ளாக்!! இந்தியாவில் புக்கிங் துவங்கியது

இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பு என்ஜினின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும். மற்றப்படி இந்த புதிய மாடலின் விலைகளை தற்போதைக்கு ஜாகுவார் நிறுவனம் வெளியிடவில்லை. வழக்கமான ஜாகுவார் எஃப்-டைப் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.97.73 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Land Rover India, today announced that bookings have been opened for the new Jaguar F-TYPE R-Dynamic Black in India. The F-TYPE R-Dynamic Black is available on 5.0 I supercharged V8 engine that delivers a power of 331 kW and a torque of 580 Nm.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X