ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடலின் முதல் டீசர் வெளியீடு

ஜீப் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக காம்பஸ் எஸ்யூவி உள்ளது. தற்போது 5 சீட்டர் மாடலாக உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் அடிப்படையில் புதிய 7 சீட்டர் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடலின் முதல் டீசர் வெளியீடு

வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய மாடலின் முதல் டீசரை ஜீப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, பிரேசில் நாட்டில் இந்த புதிய 7 சீட்டர் காம்பஸ் எஸ்யூவி வெளியிடப்பட உள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடலின் பெயர் விபரமும் வெளியாகி இருக்கிறது. அதாவது, டீசரில் ER என்ற எழுத்துக்களுடன் பெயர் முடியும் என்று காட்டப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் டீசர் 1

அதன்படி, ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவி கமாண்டர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த பெயரில் வருவதில் சில சிக்கல்கள் இருப்பதால், வேறு பெயரில் வரலாம் என்று தெரிகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் டீசரின்படி, புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 5 சீட்டர் காம்பஸ் எஸ்யூவியிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

ஜீப் காம்பஸ் டீசர் 2

அதேபோன்று, கூடுதல் வசதிகள் மற்றும் சில முக்கிய மாற்றங்களுடன் உட்புறம் வேறுபடுத்தப்பட்டு இருக்கும் என்றும் தெரிகிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெறுவதால், காரின் நீளம், வீல்பேஸ் ஆகியவற்றிலும் மாற்றங்கள் இருப்பதால், கேபின் அதிக இடவசதியை பெறும்.

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் எஞ்சின் விபரங்கள் குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், காம்பஸ் 5 சீட்டர் மாடலில் இருக்கும் அதே எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

ஜீப் காம்பஸ் டீசர் 3

பிரேசிலில் 185 எச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 200 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வழங்கப்படும். இந்தியாவில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞசின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் பிரேசில் நாட்டில் உள்ள கோயனா என்ற இடத்தில் உள்ள ஜீப் ஆலையில் இந்த புதிய எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடலானது டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட பிரிமீயம் வகை எஸ்யூவி மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has released first teaser of Compass 7 seater model ahead of debut in Brazil.
Story first published: Wednesday, April 7, 2021, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X