ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

அண்மையில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களால் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு தொடர்ந்து நெருக்கடி இருந்து வருகிறது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

இதனை மனதில் வைத்து ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ஜீப் நிறுவனம் புதிய பொலிவு கொடுத்துள்ளதுடன், கூடுதல் வசதிகளையும் சேர்த்து ஃபேஸ்லிஃப்ட் மாடலாக உருவாக்கி இருக்கிறது. இந்த மாடல் அண்மையில் சமூக வலைதளம் மூலாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

இந்த நிலையில், இந்த புதிய மாடலின் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதியை ஜீப் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 27ந் தேதி இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் க்ரில் அமைப்பு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர், 18 அங்குல அலாய் வீல்களுடன் வருகிறது. இன்டீரியர் வடிவமைப்பு முழுமையாக மாற்றம் கண்டிருப்பதுடன், புதிய இரட்டை வண்ணங்களில் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் யு-கனெக்ட்-5 என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

இந்த எஸ்யூவியில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கால் அசைவு மூலமாக பின்புற கதவை திறக்கும் வசதி, 360 டிகிரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய பல தொழில்நுட்ப வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

பாதுகாப்பு அம்சங்களிலும் அசத்தலாக வருகிறது. 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஓட்டுனர் அவசரத்தில் பிரேக் பிடிக்கும்போது, பிரேக் பவரை சரியான அளவில் செலுத்தும் பிரேக் அசிஸ்ட், செலக்டெரெயின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக பவரையும், டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக பவரையும், டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸும், டீசல் மாடலுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படும்.

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரூ.16.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா கரொக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep is all set to launch Compass Facelift model in India by 27 January, 2021.
Story first published: Thursday, January 14, 2021, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X