ஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் வந்துள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

அதிக தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் புதிய பொலிவுடன் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்த விபரங்களை வேரியண்ட் வாரியாக இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம். புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியை புக்கிங் செய்ய திட்டமிட்டுள்ளோர் இங்கே எந்த வேரியண்ட்டை தேர்வு செய்யலாம் என்பதற்கான வழி கிடைக்கும்.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

2021 மாடலாக வந்திருக்கும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட், லான்ஜிடியூட், லிமிடேட் (ஆப்ஷனல்), எஸ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேலும், லிமிடேட் வேரியண்ட்டின் அடிப்படையிலான 80வது ஆனிவர்சரி எடிசன் மாடல் சிறப்பு பதிப்பு மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்போர்ட் வேரியண்ட்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விலை குறைவான இந்த வேரியண்ட்டில் எல்இடி ரிஃப்லெக்டர் ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப், 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யு-கனெக்ட் 5 என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, புளூடூத் ஆடியோ வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, கீ லெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூ.16.99 லட்சத்திலும், சிவிடி வேரியண்ட் ரூ.19.49 லட்சத்திலும் கிடைக்கும். டீசல் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.18.69 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

லான்ஜிடியூட் (O) வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் இணைப்பு வசதியுடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, எல்இடி பனி விளக்குகள், 7 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 6 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், தொடுதிரையில் ஏசி கன்ட்ரோல் வசதி, ரூஃப் ரெயில்கள், டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், ஜீப் லைஃப் கனெக்ட்டிவிட்டி மொபைல் அப்ளிகேஷன் ஆகியவை உள்ளன. டீசல் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.20.49 லட்சம் விலையும், பெட்ரோல் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.21.29 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

லிமிடேட் (O) வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், டியூவல் பனோரமிக் சன்ரூஃப், பவர் டெயில் கேட், சைடு ஏர்பேக்குகள், கருப்பு வண்ண கூரையுடன் இரட்டை வண்ணத் தேர்வுகள் உள்ளன.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் மற்றும் மெமரி வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, சாம்பல் மற்றும் பழுப்பு வண்ண இன்டீரியர், டோர் ஸ்கஃப் பிளேட்டுகள், ஜீப் ஆக்டிவ் டிரைவ் மற்றும் செலக்ட்ரெயின் 4 வீல் டிரைவ் சிஸ்டம், டீசல் ஆட்டோமேட்டிக் மாடலில் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.23.29 லட்சம் விலையும், டீசல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்ட்டிற்கு ரூ.22.49 லட்சமும், டீசல் ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் வேரியண்ட்டிற்கு ரூ.26.29 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

லிமிடேட் 80வது ஆனிவர்சரி எடிசன்

இந்த வேரியண்ட்டில் பாடி கலர் பம்பர் மற்றும் சைடு மோல்டிங், கருப்பு வண்ண இன்டீரியர், க்ரானைட் கிறிஸ்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட 18 அங்குல அலாய் வீல்கள், 80வது ஆனிவர்சரி எடிசன் என்பதற்கான பட்டை, சாம்பல் வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட ரியர் வியூ மிரர்கள் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கும்.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எஸ் வேரியண்ட்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் கருப்பு வண்ண இன்டீரியல், 360 டிகிரி கேமரா, 8 நிலைகளில் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 10.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பெட்ரோல் சிவிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.25.29 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்ட்டிற்கு ரூ.24.49 லட்சமும், ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் வேரியண்ட்டிற்கு ரூ.28.29 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி எக்ஸோட்டிக் ரெட், மேக்னிஷியோ க்ரே, மினிமல் க்ரே, பிரைட் ஒயிட், பிரில்லியண்ட் பிளாக், கேலக்ஸி புளூ மற்றும் டெக்னோ மெட்டாலிக் க்ரீன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் மாடலானது டீசல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Facelift: Variant Wise Features List.
Story first published: Thursday, January 28, 2021, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X