சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய சந்தையில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலின் டிசைன் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், கூடுதலாக சில வசதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் மீதான ஆர்வம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஜீப் இந்தியா நிறுவனம் 1,311 காம்பஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 554 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 136.64 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்து ஜீப் காம்பஸ் கார் அசத்தியுள்ளது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

வருடாந்திர ரீதியில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் ஜீப் காம்பஸ் கார் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் 1,173 காம்பஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,311 ஆக உயர்ந்தது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன் மூலம் விற்பனையில் 11.76 சதவீத வளர்ச்சியை ஜீப் காம்பஸ் பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் உடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் கிடைக்கிறது. இதில், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும்.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 162 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில், ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட வேரியண்ட்களில் ஆப்ஷனலாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 17.19 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 28.64 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது விலை உயர்ந்த கார் என்ற போதிலும், சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் டூஸான், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுடன், ஜீப் காம்பஸ் போட்டியிட்டு வருகிறது. இதில், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய எஸ்யூவி கார்களின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது. அத்துடன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காருடனும், ஜீப் காம்பஸ் போட்டியிடும்.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காருக்கு இந்தியாவில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த காரை இந்தியாவில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது ஏதோ வார கணக்கில் அல்லது மாத கணக்கில் கிடைத்த முன்பதிவுகளின் எண்ணிக்கை கிடையாது. வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாக கிடைத்த முன்பதிவுகளின் எண்ணிக்கையாகும்.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாக 50 ஆயிரம் பேர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை முன்பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த எஸ்யூவி காரின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் செயல்திறன் வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இவை அனைத்தும்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு இந்த அளவிற்கு முன்பதிவுகள் குவிய முக்கியமான காரணம்.

சேல்ஸ் சும்மா பிச்சுகிச்சு... ஜீப் காம்பஸ் காரை வாங்க போட்டி போடும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரியுமா?

இவை அனைத்தையும் விட எக்ஸ்யூவி700 காரின் விலையை மஹிந்திரா நிறுவனம் மிகவும் சவாலாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலைக்கு இது உண்மையிலேயே மிகவும் சிறப்பானதொரு தயாரிப்பு. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கும் இதேபோல் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep compass sales increased by 137 per cent in september 2021
Story first published: Monday, October 11, 2021, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X