ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் வரும் ஜனவரி 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஜீப் நிறுவனம் தயாராகி வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டிசைனிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன. இதற்கிடையே ஜீப் நிறுவனம் தற்போது உலக அளவில் தனது மாடல்களின் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் ஜீப் நிறுவனத்தின் லைன்-அப்பில் இணையவுள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

இந்த சூழலில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் திட்டங்கள் தொடர்பாக எஃப்சிஏ இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பார்த்தா தத்தா தற்போது ஜிக் வீல்ஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்னமும் ரேஞ்ச் குறித்த பயம் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. இது மிகப்பெரிய சவால்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை எஃப்சிஏ தயாராக வைத்துள்ளது. அவற்றை சரியான நேரத்தில் கொண்டு வருவோம்'' என்றார். இதுதவிர காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்வதும், ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது எனவும் பார்த்தா தத்தா தெரிவித்துள்ளார்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

எனினும் தற்போது இந்த செக்மெண்ட் பெரும்பாலும் ஐசிஇ பவர்டிரெயின்களையே நம்பியுள்ளது. எனவே எலெக்ட்ரிக் டிரைவ்டிரெயின்களை கொண்டு வருவதற்கான சரியான நேரத்திற்காக ஜீப் நிறுவனம் காத்து கொண்டுள்ளது. இனி, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்களுக்கு வருவோம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

நாம் ஏற்கனவே கூறியபடி ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 173 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 162 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு ஜீப் காம்பஸ் விற்பனையில் தொடர்ந்து சவால் அளிக்கும். இதில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...

அதே சமயம் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது. அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது பலமுறை கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep #jeep compass
English summary
Jeep Compass SUV Will Be Electrified - Check Details Here. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X