2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

2022 ஜீப் க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை அறிவிக்கும் விதத்தில் புதிய டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

ஜீப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் வீடியோவில் ஒளி வீசும் ஹெட்லைட் மற்றும் ஃபாக் விளக்குகளை மட்டுமே சற்று மங்கலாக முன்பக்க க்ரில் அமைப்புடன் பார்க்க முடிகிறது.

ஏனெனில் இந்த வீடியோ முக்கியமாக 2022 க்ராண்ட் வாகோனீரின் உலகளாவிய அறிமுகம் வருகிற மார்ச் 11ஆம் தேதி என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

முன்பக்க க்ரில் வழக்கம்போல் ஜீப் பிராண்டின் அடையாளமான 7-ஸ்லாட்கள் உடன் வழங்கப்பட்டாலும், க்ராண்ட் வாகோனீர் கான்செப்ட் மாடலில் வழங்கப்பட்ட செங்குத்தான க்ரோம் லைன்களில் இருந்து நிச்சயம் வேறுபடும் என கூறப்படுகிறது.

2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

அதேபோல் ‘Wagoneer' என்ற ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றும் கான்செப்ட்டில் பார்த்தை காட்டிலும் மிக நெருக்கமாக வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த டீசர் வீடியோவின் மூலம் முன்பக்க ஹெட்லைட்களின் டிசைனும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

ஹெட்லைட்களுக்கு கீழே ஃபாக் விளக்குகள் எல்இடி பார்களாக வழங்கப்படாமல், மூன்று பாகங்களை ஒன்றாக கொண்டவைகளாக உள்ளன. இருப்பினும் ஒட்டுமொத்த தோற்றத்தில் 2022 க்ராண்ட் வாகோனீர் அதன் கான்செப்ட் மாடலையே பெரிதும் ஒத்து காணப்படும் என்பது உறுதி.

2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

ஆனால் இந்த 2022 மாடலில் ஜீப் வாகோனீரின் அடையாளமான பழமையான வுட் பேனலிங் வழங்கப்பட போவதில்லை. இது பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். வாகோனீர் இந்தியாவில் விற்பனையில் இல்லை என்றாலும், சில ஹாலிவுட் படங்களின் மூலம் உலகளவில் மிக பிரபலமான ஜீப் மாடலாகும்.

2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்!! எப்போது தெரியுமா?

எந்த அளவிற்கு என்றால், வாகோனீரின் 1984- 1991 வெர்சன்கள் தற்போதும் 40,000 டாலர்களில் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. 2022 ஜீப் க்ராண்ட் வாகோனீரின் விலை நமக்கு தெரிந்தவரை அதிகப்பட்சமாக 10,000 அமெரிக்க டாலர்கள் வரையில் நிர்ணயிக்கப்படலாம். அமெரிக்காவில் இந்த புதிய ஜீப் மாடல் வருகிற கோடை காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
2022 Jeep Grand Wagoneer Release Date Revealed, Teased
Story first published: Saturday, March 6, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X